டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

73வது குடியரசு தினம்.. டெல்லியில் தேசிய கொடி ஏற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. கண்கவர் அணிவகுப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடத்தப்பட்டது. குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்தியா1947ல் சுதந்திரம் அடைந்த நிலையில் 1950ல் குடியரசாக அறிவிக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி இந்தியாவில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது.

மோடி மரியாதை செலுத்தினார்

மோடி மரியாதை செலுத்தினார்

குடியரசுத் தினத்தை முன்னிட்டு தேசிய தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை மரியாதை செலுத்தினார். அங்கு இருக்கும் போர் வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படை அணிவகுப்பு நடக்கும் பகுதிக்கு பிரதமர் மோடி வந்தார். இதை தொடர்ந்து டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

முப்படை மரியாதை

முப்படை மரியாதை

பின்னர் ராஜபாதையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அங்கு குடியரசுத் தின கவுரவ பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். பின்னர் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் ராஜ வீதியில் நடந்தன. 25 அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன. பல்வேறு மாநிலங்கள், அரசு அமைப்புகள், படைகளின் அணிவகுப்புகள் நடந்தன. டிஆர்டிஓ சார்பாக இரண்டு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் கலந்து கொண்டன.

அலங்கார ஊர்தி

அலங்கார ஊர்தி

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அலங்கார ஊர்திகள் இன்று அணிவகுப்பில் பங்கு பெற்றது. 9 மத்திய அரசின் துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் புத்தர் சிலை அமைந்த இந்திய விமானப்படை அலங்கார ஊர்தி, ஜம்மு புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்ட காஷ்மீர் அலங்கார ஊர்தி, காசி விசுவநாதர் கோவில் அடங்கிய உத்தர பிரதேச அலங்கார ஊர்தி, சுதந்திர போராட்டத்தை பறைசாற்றும் பஞ்சாப் அலங்கார ஊர்திகள் அதிக கவனம் பெற்றன.

விமான சாகசம்

விமான சாகசம்

தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அங்கு நடந்தன. ராணுவ பலத்தை காட்டும் வகையில் அதிநவீன பீரங்கிகள், டாங்கிகள், ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெற்றது.மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், அதிநவீன ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்கள் கொண்ட விமானப்படை சாகசமும் நடைபெற்றது. அப்பாச்சி, ரபேல், சுகோய், ராஹத், ஏகலைவா, திரிசூல், திரங்கா, டகோட்டா ஜாகுவார் எம்ஐ-17, சாரங், விஜய், அம்ரித் போன்ற விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இன்று அணிவகுப்பு சாகசங்களை செய்தது..

Recommended Video

    ஜனவரி-26: குடியரசு தினம் பிறந்த கதை… வரலாற்றில் அறிய வேண்டிய முக்கிய நிகழ்வுகள்!
    குடியரசுத் தினம்

    குடியரசுத் தினம்

    குடியரசுத் தினத்தை முன்னிட்டு ராஜமுதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து சென்றது இதுவே முதல்முறை. கொரோனா பரவலை முன்னிட்டு டெல்லியில் 5000- 8000 அளவிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின வருடம் இது என்பதால் ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவத்தை' கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்த முறை பெரிய கலைநிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுடன் குடியரசுத் தின விழா இன்று கொண்டாடப்பட்டு உள்ளது.

    English summary
    73rd Republic Day: Armed forces Parade and PM Modi Rajpath Celebration today in Delhi. . This year, on January 26, 2022, India celebrates its 73rd Republic Day. In 1950, on this day, the Constitution of India came into existence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X