மொட்டைமாடியில் வெயிட் லிப்டிங்.. அசத்தும் 80வயது பாட்டி.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!
பாட்டி ஒருவர் பளு தூக்கும் வீடியோ நெட்டிசன்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
டெல்லி: அதிக மெனக்கெடல் இல்லாமல், கை தேர்ந்த வீராங்கனை போல், 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் பளு தூக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கடினமான உடற்பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுவது பளு தூக்குவது. ஒவ்வொருவரின் உடல்நிலையைக் கருத்திக் கொண்டு அவர் தூக்க முடிந்த அளவு எடையைத்தான் பயிற்சியாளர்கள் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தருவார்கள். கடினமான பயிற்சி மற்றும் முறையான உணவுப் பழக்கம் மூலமாகவே அதிக எடைகளைத் தூக்கும் அளவிற்கு சக்தியைப் பெற முடியும்.
Recommended Video
குறிப்பாக இது போன்ற பயிற்சிகளில் இளவயதுக்காரர்களே சிறப்பாக செய்ய முடியும் என்ற பிம்பமும் உள்ளது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை.. மனதிருந்தால் மலையைக்கூட அசால்டாகத் தூக்கலாம் என நிரூபித்திருக்கிறார் 80 வயது பாட்டி ஒருவர்.

பாட்டியின் பலம்
தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வரும் வீடியோவில், சுமார் 80 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர், சர்வ சாதாரணமாக பளு தூக்குகிறார். மொட்டை மாடியில் நடக்கும் இந்தக் காட்சிகள் சுமார் 7 விநாடிகள் மட்டுமே ஓடுகின்றன. பாட்டி மேலே தூக்கி விட்டு, மீண்டும் கீழே தரும் அந்த பளுவை இளைஞர் ஒருவர் வாங்குகிறார்.

எனக்கே சவாலா?
அந்த இளைஞர் அதனை வாங்க எவ்வளவு சிரமப்படுகிறார் என்பது அந்த வீடியோவிலேயே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பாட்டியோ கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. 'என்னிடமா சவால் விடுகிறீர்கள்..' என்பது போல், சர்வசாதாரணமாக அந்த பளுவை மேலே தூக்கி, கீழே இறக்குகிறார்.

அம்மாடியோவ்..
சில நொடிகள் பளுவைத் தலைக்கு மேலே தூக்கியபடி நிற்கிறார். அப்போதும் அவரிடம் தள்ளாட்டமே இல்லை. வயதாகி விட்டாலே அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கக்கூடாது, சுளுக்கு பிடித்து விடும், எலும்பு உடைந்துவிடும் என நம்மூரில் சொல்லப்படும் நிலையில், இந்தப் பாட்டியின் இந்த பளு தூக்கும் காட்சி இணையத்தை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

வைரல் வீடியோ
பாட்டி யார், அவர் முன்னாள் விளையாட்டு வீராங்கனையா, எப்படி அவரால் இவ்வளவு பளுவைத் தூக்க முடிந்தது என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை. இந்த வீடியோவை யார் பதிவு செய்தார்கள் என்பதும் தெரியவில்லை. பாட்டியின் உடையைப் பார்க்கும்போது, அது வடநாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications