டெல்லி வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயம்
டெல்லி: வடகிழக்கு டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து 82 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சி.ஏ.ஏ.வை எதிர்த்து வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பாக சி.ஏ.ஏ. ஆதரவு போராட்டத்தை பாஜகவினர் நடத்தினர். இதனால் வன்முறை வெடித்தது.

வடகிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இஸ்லாமியர்களின் வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்திருக்கிறது.
இதில் 21 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலியாகி உள்ளனர். மேலும் 82 பேர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் மொத்தம் 250 பேர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை உயிரிழந்தோரில் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ வைக்கப்பட்டும் ஆசிட் வீசப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கண்ணீர்புகை குண்டுகள் தாக்குதலாலும் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 350 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 32 எம்.எம்., .9 எம்.எம்., .315 எம்.எம். துப்பாக்கிகளுக்காக குண்டுகள் இவை என்றனர்.
இந்த வன்முறைகளில் உள்ளூர் ரவுடிகள் பலரும் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் கள்ள துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் டெல்லி போலீசார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications