3வது அலை.. நாட்டில் இதுவரை 86 கோடி பேருக்கு தடுப்பூசி.. கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள்
86 கோடி கொரோனா தடுப்பூசிகள் நம் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன
டெல்லி: இந்தியாவில் இதுவரை மொத்தம் 86 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளையும் முடுக்கி விட்டு உள்ளது... இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றன.

தடுப்பூசி
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. .. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதற்கு பிறகு, கடந்த ஜுன் மாதத்தில் இருந்து 18 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன... அனைத்து மாநிலங்களுமே தங்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதால், அதில் தட்டுப்பாடும், பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகின்றன.

3வது அலை
எனினும், இவைகளை மத்திய அரசு சரி செய்து, தட்டுப்பாடு எழாதவாறு பார்த்து கொண்டு வருகிறது.. அதன்படி,முதல் டோஸ்கள் போடப்பட்டு, 2வது டோஸ்களை செலுத்தும் பணியையும் பல்வேறு மாநிலங்கள் கையில் எடுத்துள்ளன.. 3வது அலை பரவல் வர உள்ளதால், மக்களும் இத்தகைய தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கணக்கீடு
இந்த நிலையில், எவ்வளவு தடுப்பூசிகளை மக்களுக்கு இதுவரை செலுத்தி உள்ளோம் என்பதை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது அறிக்கை மூலம் வெளியிடும்.. அந்த வகையில் தற்போதும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அதில், கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன என்றும் இதுவரை மொத்தம் 86 கோடியே 1 லட்சத்து 59 ஆயிரத்து 11 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

2 டோஸ்கள்
மேலும், சுமார் 22 கோடியே 70 லட்சம் பேர் 2 டோஸ் தவணை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர..
தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை ஒரு கோடியே 7 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டுள்ளனர்.. இதுவரை மொத்தம் 4 கோடியே 62 லட்சம் தடுப்பூசிகள் மாநிலம் முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications