சிக்கிய 87 கட்சிகள்.. லிஸ்ட்டில் இருந்து நீக்கம்.. தேர்தல் கமிஷன் அதிரடி.. காரணம் என்ன தெரியுமா?
தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து, 87 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன
டெல்லி: தேர்தல் கமிஷன் பட்டியலில் இருந்து, செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது... வரிக்கணக்கு தாக்கல் செய்யாதது, முகவரியை புதுப்பிக்காதது என, இப்படி காணாமல் போன, 87 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறை.. கடந்த வருடம் செப்டம்பர் மாத நிலவரப்படி, 2,796 பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த, 2001ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 300 சதவீத உயர்வாகும்.. ஆனால், வெறும் பெயரளவுக்கு கட்சியை ஆரம்பித்துவிட்டு, வருமான வரிச்சலுகை உள்ளிட்ட சலுகைகளை சிலர் பெற்று வந்தனர்.

87 கட்சிகள்
அதுமட்டுமல்ல, தங்களின் கட்சியின் பெயரை காட்டி, சில மோசடிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.. அதனால்தான், தேர்தல் கமிஷன் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.. அதன்படி, தேர்தல்களில் போட்டியிடாத, மற்றும் முறையாக கணக்குகள் தாக்கல் செய்யாத கட்சிகளின் பெயர்களை நீக்க போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.. இதனால், அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்த பல கட்சிகள் வெலவெலத்து போய்விட்டன..

அறிவிப்பு
தேர்தல் கமிஷன் சொன்னபடியே, ஆய்வுகளை மேற்கொண்டது.. அதன்படி, நாடு முழுதும் உள்ள, 2,100 பதிவு செய்யப்பட்ட, அதே நேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் குறித்து ஆய்வுகளை தொடங்கியது.. அப்போதுதான், 87 கட்சிகள் சிக்கின.. இவைகள் முறையாக செயல்படாதவை.. காணாமல் போனவை.. அதனால்தான், அவைகளின் பெயர்களை நீக்கியது தேர்தல் கமிஷன்.. மாநில தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, ஏற்கனவே குறிப்பிட்டிருந்த முகவரியில் இந்தக் கட்சிகள் இயங்காதது கண்டுபிடிக்கப்பட்டது...

தேர்தல் சின்னம்
அதுமட்டுமல்ல, நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தன. அதற்கு பிறகு உரிய விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரிகள், செயல்பாட்டில் இல்லாத இந்த 87 கட்சிகளையும் கண்டுபிடித்து, நீக்கினார்கள்.. இந்த கட்சிகள் உடனடியாக விதிமுறைகளை சரி செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்தலில் சின்னம் பெறுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகின்றன..

சின்னங்கள்
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "இந்த நடவடிக்கைக்கு உள்ளான அரசியல் கட்சிகள், பரிகாரம் கோரி உரிய ஆதாரங்களுடன் தலைமை தேர்தல் அதிகாரிகளை அணுகலாம்.. அவ்வாறு தவறை திருத்தி கொள்ளும் நடவடிக்கையை 87 அரசியல் கட்சிகளும் எடுக்கவில்லை என்றால், தேர்தலின்போது பொதுச்சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கீடு சட்டம் 1968-ன் கீழ் பலன்களை அனுபவிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications