ஜூலை 19 முதல் குளிர்கால கூட்டத்தொடர்.. வேக்சின் போட்ட 90% எம்பிகள்.. தடுப்பூசி போடாத ராகுல்.. ஏன்?
டெல்லி: வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஏற்கனவே 90% எம்பிகள் வேக்சின்களை செலுத்துக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்போது தான் அது மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது.
இந்த காலகட்டத்தைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கேற்ப புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்ததில் இருந்து வேக்சின் பணிகள் வேகமெடுத்துள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர்
இந்தச் சூழலில் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. தற்போது வரை கிட்ட தட்ட 90% எம்பிகள் ஏற்கனவே வேக்சிகன்களை எடுத்துக் கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் பெரும்பாலான எம்பிகள் தடுப்பூசியின் 2 டோஸ்கலையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

மாநிலங்களவை கூட்டத்தொடர்
நாட்டின் மாநிலங்களவையில் 60 முதல் 94 வயதுடையவர்கள் வரை எம்பிகளாக உள்ளனர். மொத்தமுள்ள 232 மாநிலங்களவை எம்பிகளில் 179 பேருக்கு வேக்சின் 2 டோஸ்கள் போடப்பட்டுள்ளது. அதேபோல 39 பேருக்கு வேக்சின் ஒரு டோஸ் மட்டும் போடப்பட்டுள்ளது. ஐந்து எம்பிகள் தற்போது கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்பது பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசியின் ஒரு டோஸைக்கூட எடுத்துக் கொள்ளவில்லை.

மக்களவை கூட்டத்தொடர்
மக்களவையை மொத்தமுள்ள 543 இடங்களில் மூன்று இடங்கள் காலியாக உள்ளது. மீதமிருக்கும் 540 உறுப்பினர்களில் 321 பேர் கொரோனா வேக்சின்களின் 2 டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர். 124 எம்பிகள் ஒரு டோஸை போட்டுக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 96 எம்பிகள் மட்டும் ஒரு டோஸ் வேக்சின் கூட செலுத்தவில்லை. அவர்கள் ஏன் தடுப்பூசி போடவில்லை, குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேக்சின் கட்டாயமாக என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Array
பிரதமர் நரேந்திர மோடி, 60 வயதைக் கடந்தவர்களுக்கு வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டவுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதேபோல அமித் ஷா தொடங்கி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களும் வேக்சின் போட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரம் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கொரோனாவில் இருந்து மீண்டார். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வேக்சின் போடக் கூடாது என்பதால் அவர் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications