"மேட்ச் ஆடலாம் வா".. 10 வயது சிறுவனை அழைத்து.. "சீரழித்த" 12 வயது சிறுவர்கள்.. என்ன நடந்தது?
டெல்லி: கிரிக்கெட் விளையாடலாம் வா என அழைத்து சென்று 10 வயது சிறுவனை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் மீண்டும்
ஒவ்வொரு நாளும் உதிர்த்து முளைக்கும் நெடுமரத்தின் இலைகளை போலவே நாடு முழுவதும் அவ்வப்போது பாலியல் குற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த குற்றங்கள் ஏதோ எங்கேயோ நடக்கிறது என்று நாம் நினைத்து கடந்துவிட்டால் நம்மைவிட விவரம் அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இன்றைய குற்றங்கள் நாளைய சமூகத்தின் போக்கையே மாற்றிவிடும் தன்மை கொண்டது என்பதை உணர்ந்து அதனை தடுக்க குரலெழுப்ப வேண்டும்.

தாக்குதல்
இவ்வாறு இருக்கையில் டெல்லியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 18ம் தேதி 10 வயது சிறுவன் ஒருவனை 12 வயது சிறார்கள் சிலர் வீடு தேடிவந்து கிரிக்கெட் விளையாடலாம் வா என அழைத்துள்ளனர். சிறுவனும் ஆசையாக சென்றுள்ளான். ஆனால் அந்த சிறார்கள் சிறுவனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுவன் எவ்வளவோ கெஞ்சியும் சிறார்கள் அவனை விடவில்லை. அதுமட்டுமல்லாது சத்தம் போட்டதற்காக சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து வீடு திரும்பிய சிறுவனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பயந்து போன பெற்றோர் அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்குதான் விவரம் தெரியவந்துள்ளது. இதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ந்து போயினர். தகவலறிந்த காவல்துறையினர் சிறுவனை மீட்டு டெல்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதித்தனர். காயங்கள் தீவிரமாக இருந்த நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்தனர்.

உயிரிழப்பு
ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்றுகொள்ள முடியாமல் பெற்றோர்கள் மருத்துவமனையிலேயே கதறி அழுதுள்ளனர். தன்னுடைய மகனை சில நாட்களில் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடலாம் என மருத்துவர்கள் கூறியதாகவும் ஆனால் தற்போது மகன் உயிரிழந்துவிட்டதாக கூறுவதாகவும் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications