தலைநகரில் அதிர்ச்சி.. மசூதியில் வைத்து.. 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதகுரு கைது!
டெல்லி: தலைநகர் டெல்லியில் மசூதியில் வைத்து 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மதகுரு கைது செய்யப்பட்டார்.
இந்திய தலைநகர் டெல்லியில் வடகிழக்கு பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் தொழுகை நடத்த அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம் செய்தார்
இந்த நிலையில் அந்த மசூதிக்கு 12 வயதுடைய சிறுமி தண்ணீர் எடுக்க சென்றாள். அப்போது மசூதியில் இருந்த 48 வயதான மதகுரு ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை வெளியே சொல்லக்கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டினார். இதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற சிறுமி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறினாள்.

மதகுரு கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மதகுரு மீது டெல்லி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மதகுரு மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காசியாபாத்தில் உள்ள லோனி மாவட்டத்தில் இருந்த மதகுருவை திங்கள்கிழமை காலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதகுரு, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேந்தவர் ஆவார்.

4 குழந்தைகளுக்கு தந்தை
காசியாபாத்தின் லோனியில் வசித்து வந்த அவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். மதகுரு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இதனையடுத்து மதகுரு 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பபட்டார்.

உள்ளூர் மக்கள் போராட்டம்
சிறுமியை மதகுரு பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்து உள்ளூர் மக்கள் அந்த மசூதி முன்பு திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். போலீசார் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புனித இடமான மசூதிக்குள் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications