30 அதிகாரிகள்.. காஷ்மீரை நாளை பார்வையிடும் ஐரோப்பிய பாராளுமன்ற குழு.. விலக்கப்படும் இரும்புத்திரை!
ஜம்மு காஷ்மீரின் நிலையை தெரிந்து கொள்வதற்காக ஐரோப்பாவை சேர்ந்த பாராளுமன்ற குழு ஒன்று இந்தியா வந்துள்ளது.
டெல்லி: ஜம்மு காஷ்மீரின் நிலையை தெரிந்து கொள்வதற்காக ஐரோப்பாவை சேர்ந்த பாராளுமன்ற குழு ஒன்று இந்தியா வந்துள்ளது. இவர்கள் நாளை காஷ்மீரை பார்வையிட இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு பின் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்தது. அங்கு தலைவர்கள் பலர் இன்னும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் அங்கு முழுமையாக தகவல் தொடர்பு அளிக்கப்படவில்லை.
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் விஷயங்களை இந்தியா வெளி உலகில் இருந்து மறைக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாகிஸ்தானும், ஜம்மு காஷ்மீர் தலைவர்களும் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள்.

இந்தியா வருகை
இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீரின் நிலையை தெரிந்து கொள்வதற்காக ஐரோப்பாவை சேர்ந்த பாராளுமன்ற குழு ஒன்று இந்தியா வந்துள்ளது. இந்த குழுவில் மொத்தம் 30 எம்பிக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் நாளை காஷ்மீரை பார்வையிட இருக்கிறார்கள்.

யார் ஏற்பாடு
இது அதிகாரப்பூர்வ பயணம் கிடையாது. தங்கள் சொந்த முயற்சியில் அவர்கள் காஷ்மீரை பார்க்க வந்துள்ளனர். இன்று காலை இந்த குழு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தனர். காஷ்மீரின் நிலை குறித்து இவர்களிடம் கேட்டறிந்தனர்.

எங்கு செல்வார்கள்
நாளை இந்த குழு காஷ்மீரில் உள்ள டால் லேக் பகுதிக்கு செல்வார்கள். அதன்பின் ஜம்முவில் உள்ள மக்களுடன் உரையாடுவார்கள். பின் அங்கு கடை நடத்தும் மக்களுடன் பேசுவார்கள். அரசியல் தலைவர்களை இவர்கள் சந்திப்பது சந்தேகம்தான் எனப்படுகிறது.
|
தெரியும்
இது தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி டிவிட் செய்துள்ளார். உலகிற்கும் காஷ்மீருக்கும் இடையில் இருந்து இரும்புத்திரை அகற்றப்படுகிறது. காஷ்மீரின் மோசமான நிலைக்கு இந்திய அரசே காரணம். ஐரோப்பிய குழு உள்ளூர் மக்கள், செய்தியாளர்களிடம் பேசும் என்று எதிர்பார்க்கலாம், என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications