காற்றில் கரைந்த கே கே! ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மரணத்திற்கு காரணம் என்ன? வெளியான தகவல்..!
டெல்லி : பிரபல பாடகர் கேகே-வின் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.
மிகவும் துடிப்பு மிக்க நபரான அவர் கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியின்போது பங்கேற்று பாடினார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

பாடகர் கேகே
53 வயதான பாடகர் கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார். கேரளத்து தம்பதிக்கு மகனாக பிறந்த கேகே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார். ரசிகர்கள் பலர் தங்களது டுவிட்டரில் மறைந்த பாடகர் கேகேவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.
Recommended Video

திடீர் மரணம்
அவரது திடீர் மரணம் மக்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், இவரது மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மரணத்திற்கு பல்வேறு விஷயங்கள் காரணம் என குற்றசாட்டு எழுந்துது.

தமனியின் அடைப்பு
இந்நிலையில் பாடகர் கேகே மரணத்துக்கு காரணம் என்ன என்பது குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் அவரது மருத்துவ அறிக்கையில்," கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே இதயத்திற்கு செல்லும் பிரதான கரோனரி தமனியில் 80 சதவிகித அடைப்பு இருந்திருக்கிறது. இதுவல்லாமல் சிறிய மற்றும் துணை தமணிகளிலும் அடைப்பு இருந்திருக்கிறது.

சிபிஆர் சிகிச்சை
ஆனால் எங்கும் 100 சதவிகித அடைப்பு காணப்படவில்லை. நிகழ்ச்சியில் அவர் அதிக உற்சாகம் அடைந்திருக்கிறார். இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டிருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். உடனடியாக அவருக்கு சிபிஆர் கொடுத்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications