1993-ல் 5 நிமிடத்தில் விமானக் கடத்தலை முறியடித்த கமாண்டோக்கள்- 1999 IC 814-ல் கோட்டைவிட்ட வாஜ்பாய்!
டெல்லி: 1999-ம் ஆண்டு பயங்கரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814 கடத்தப்பட்ட விவகாரத்தை முன்வைத்து தொடர்ந்து சர்ச்சைகள் வலம் வந்து கொண்டேதான் இருக்கின்றன. 1993-ம் ஆண்டு விமானக் கடத்தல் முயற்சியை வெறும் 5 நிமிடத்தில் முறியடித்து சாதனை படைத்த கமாண்டோ படையினரைத்தான் 1999-ம் ஆண்டு விமான கடத்தல் சம்பவத்தின் போது 45 நிமிடங்கள் வேடிக்கை பார்க்க வைத்தவர் அன்று மத்தியில் ஆண்ட பாஜக அரசின் பிரதமராக இருந்த வாஜ்பாய் என்பதுதான் புதிய சர்ச்சை.
1999-ம் ஆண்டு நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமான IC 814 நடுவானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த விமானக் கடத்தல் மூலமாக உலகின் மிக மோசமான பயங்கரவாதி மவுலானா மசூத் அசார், இந்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1999-ம் ஆண்டு IC 814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதை விவரிக்கிறது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் IC 814-கந்தஹார் வெப்சீரிஸ். இந்த தொடருக்குதான் மத்தியில் ஆளும் பாஜக அரசு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பி விளக்கம் பெற்றது. இதனால் 1999-ம் ஆண்டு விமானக் கடத்தல் சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
முதல் பகுதி:வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 1
நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸில், இந்து பெயர்களை பயங்கரவாதிகள் புனை பெயராக பயன்படுத்தியதற்காக மத்திய அரசு எதிர்க்கவில்லை; அந்த தொடர் முழுவதுமே அப்போதைய மத்திய பாஜக ஆட்சி, பிரதமராக இருந்த வாஜ்பாயின் செயலற்ற தன்மையை அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை வெளியில் சொல்ல முடியாமல்தான் மத்திய அரசு வேறு ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து எதிர்க்கிறது என்பதை நாம் ஒரு மினி தொடராகவே வெளியிட்டிருந்தோம்.
தற்போது இந்த விவகாரத்தில் ஒரு புதிய சம்பவம் பேசு பொருளாகி இருக்கிறது. அதாவது 1993-ம் ஆண்டு டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் ஶ்ரீநகருக்கு சென்ற IC 427 என்ற விமானத்தையும் நடுவானில் பயங்கரவாதி ஒருவர் கடத்த முயன்றார். இந்த விமானக் கடத்தலை வெறும் 5 நிமிடங்களில் தேசிய கமாண்டோ படையினர் முறியடித்தனர். உலகத்திலேயே 5 நிமிடத்தில் விமானக் கடத்தல் முயற்சியை முறியடித்த கமாண்டோ படையின் இந்த சாதனையும் லிம்கா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.
2-வது பகுதி:வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 2
இத்தகைய திறமையான தேசிய கமாண்டோ படையினரை நல்ல வாய்ப்பிருந்தும் 1999 IC 814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் சம்பவத்தின் போது பயன்படுத்தவில்லை அப்போதைய பிரதமர் வாஜ்பாய். ஆமாம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் எரிபொருளுக்காக IC 814 விமானம் தரை இறக்கப்பட்டு சுமார் 45 நிமிடம் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது தீவிரவாதிகளைத் தாக்குவதற்கு தேசிய கமாண்டோ படையும் தயார் நிலையில் இருந்தது.
ஆனால் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசு, கமாண்டோ படைக்கு அனுமதி தராமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டே இருந்தது. 45 நிமிடம் காத்திருந்த நிலையில் உஷாரான பயங்கரவாதிகள் பயணிகளுடன் விமானத்தை மீண்டும் புறப்படச் செய்தனர்.
3-வது பகுதி:வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 3
அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கிடைத்த 45 நிமிடத்தை அன்றைய வாஜ்பாய் அரசு பயன்படுத்த தவறியது. இதனால்தான் விமானக் கடத்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். அன்று விமானக் கடத்தலை கமாண்டோ படையினர் முறியடிக்க வாஜ்பாய் அனுமதித்திருந்தால் இந்தியா மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலை மும்பையில் சந்தித்திருக்காது; அதி உச்சமாக இந்திய நாடாளுமன்றத் தாக்குதலும் நடந்திருக்காது. ஏனெனில் இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக இருந்ததே 1999 இந்தியன் ஏர்லைன்ஸ் IC814 விமானக் கடத்தல் மூலம் இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு அன்றைய பாஜக மத்திய அமைச்சர் ஜஸ்வந்த்சிங்கால் பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அதே மவுலானா மசூத் அசார்தான் என்பதே சரித்திரம்!
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications