Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் பைலட், புருஷனை தெருவில் இழுத்துப்போட்டு மரண அடி.. 10 வயது சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி துவாரகாவில் வீட்டு வேலை செய்த 10 வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக பெண் விமானி மற்றும் அவரது கணவரை, கும்பலாக சேர்ந்து சிலர் சரமாரியாக அடித்து உதைத்தனர். நடுதெருவில இழுத்துப்போட்டு கணவன் மனைவி இருவரும் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இதனிடையே கணவன் மனைவி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி துவாரகா பகுதியைச் சேர்ந்தவர் கௌசிக் பாக்சி வயது 36. இவரது மனைவி பூர்ணிமா , இவருக்கு வயது 33. பூர்ணிமா விமானியாக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் கௌசிக் விமான நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களது வீட்டில் 10 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அந்த சிறுமியை கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சித்ரவதை செய்து வந்துள்ளனர். சிறுமியின் கை, கால்களில் சூடு வைக்கப்பட்டிருந்தது. உடலில் பல்வேறு இடங்களில் சிறுமிக்கு காயம் இருந்தது. பல மாதங்களாக சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளனர்

A pilot and her husband were dragged and beaten up by a group of people in Delhi’s Dwarka

இதனை பார்த்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் சிலர். ஏன் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தினீர்கள் என்று கேட்டு பெண் விமானியிடமும், அவரது கணவரிடமும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் கும்பலாக ஒன்று சேர்ந்த விமானி மற்றும் அவரது கணவரை வீட்டிற்கு வெளியே இழுத்து போட்டு சரமாரியாக தாக்கினார்கள்.

விமானி பூர்ணிமாவை சுற்றி வளைத்த பெண்கள் அவரது தலைமுடியை இழுத்து பிடித்து தள்ளிவிட்டு, கன்னத்தில் மாறி மாறி தாக்கினார்கள். விமானி பூர்ணிமாவின் கணவர் கௌசிக் பாக்சியையும் சட்டையை பிடித்து இழுத்து வந்து, தள்ளிவிட்டு சுற்றி வளைத்து, கடுமையாக அடித்து உதைத்தனர். இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனிடையே இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துவாரகா போலீசார் விமானி பூர்ணிமா மற்றும் அவரது கணவர் கௌசிக் பாக்கியை மீட்டனர்.

தம்பதியினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் காயப்படுத்துதல்), மற்றும் 342 ( சிறைபடுத்துதல்) மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைதானார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

துவாரகா டிசிபி எம் ஹர்ஷ வர்தன் நடந்த சம்பவம் பற்றி கூறுகையில், "நாங்கள் விஷயத்தை கேள்விப்பட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அங்கு10 வயது சிறுமியை ஒரு தம்பதி வீட்டு வேலைக்காக வைத்திருந்ததைக் கண்டோம்.சிறுமியை மீட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம் . சிறுமியின் உடலில் சில காயங்கள் மற்றும் தீக்காயங்கள் இருந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவன், மனைவி இருவரையும் காவலில் எடுத்து கைது செய்து விசாரிக்க உள்ளோம். குழந்தைக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

முன்னதாக சிறுமி குறித்து வெளியான வீடியோவில், சிறுமியின் கண்கள், முகம், கைகள் மற்றும் பிற உடல் பாகங்களில் காயங்கள் இருந்தன.சிறுமியின் கைகளில் உள்ள காயங்கள் தீக்காயங்களாக இருந்தன. சிறுமி மிக மோசமாக சித்ரவதை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் தான் ஆத்திரம் அடைந்து சிறுமியை அவர்களது உறவினர்கள் கடுமையாக தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+