டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுக்கு பேர்தான் தன்னம்பிக்கை! இந்த நாளை இனிதாக்க வேண்டுமா? இந்த "சூப்பர் வுமனை" பற்றி படியுங்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உழைத்தால்தான் அடுத்தடுத்த நாளுக்கான உணவு தேவை பூர்த்தியாகும் என்கிற நிலையில், சக்கர நாற்காலியில் சென்று உணவு விநியோகித்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர் போராட்டங்கள்தான் வாழ்வின் அடுத்த நிலைக்கு தன்னை கொண்டு செல்லும் என்பதை இந்த பெண் உணர்ந்துள்ளார் என இந்த வீடியோ குறித்து சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பகீர்.. கால் பாதத்தை நாக்கால் தடவ செய்து மாற்றுத்திறனாளி சித்ரவதை.. 2 பேரை கைது செய்த ஒடிசா போலீஸ்! பகீர்.. கால் பாதத்தை நாக்கால் தடவ செய்து மாற்றுத்திறனாளி சித்ரவதை.. 2 பேரை கைது செய்த ஒடிசா போலீஸ்!

வீடியோ

வீடியோ

"வாழ்க்கை என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. அது பழுத்து விழும் பழமல்ல. அதை நாம்தான் அடித்து வீழ்த்த வேண்டும். இந்த முயற்சியில் நாம் முன்னேறிக்கொண்டே இருப்பதுதான் முக்கியமானது" என்கிற கருத்துக்கு ஏற்ப டெல்லியில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் சென்று உணவு விநியோகம் செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

 உணவு டெலிவரி

உணவு டெலிவரி

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பொதுவாக இதுபோல உணவு விநியோகத்தில் நாளொன்றுக்கு ரூ.500 கிடைப்பது பெரிய விஷயம். ஆனால் இதற்கான உழைப்பு என்பது அந்த தொகையை விட அதிகமானதுதான். குறிப்பிட்ட நேரத்தில் உணவை பெற்றுக்கொள்வதில் தொடங்கும் இந்த பணி, அதை பத்திரமாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்த்த பின்னர்தான் முடிவடைகிறது.

 வளர்ச்சி?

வளர்ச்சி?

இந்நிலையில், இந்த வேலையில் தொடக்கத்தில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பொருளாதார தேவையையடுத்து பெண்களும் பலர் இதில் இணைந்து பணியாற்ற தொடங்கினர். சிலர் தங்கள் குழந்தைகளை தன்னுடனே உணவு டெலிவரிக்கு கொண்டு செல்வார்கள். அந்த அளவு பொருளாதார தேவை மக்களுக்கு இருக்கிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வந்துவிட்டோம் என்று சொல்லிக்கொண்டாலும் இது போன்ற வீடியோக்கள் இந்த வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 யாருக்கான வளர்ச்சி?

யாருக்கான வளர்ச்சி?

குறிப்பாக, கடந்த 2021-2022ன் முதல் காலாண்டில் இந்தியா 20.1% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்தது. ஆனால் நடப்பாண்டில் இது 13.5%ஆக சுருங்கிவிட்டது. இந்த 13.5 சதவிகித வளர்ச்சியை வேறெந்த உலக நாடுகளும் எட்டவில்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வளர்ச்சி சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதே முக்கிய கேள்வியென சமூக ஆர்வலர்களும், பொருளாதார அறிஞர்களும் கேட்டு வருகின்றனர்.

English summary
A video of a Specially abled Woman delivering food in a wheelchair in Delhi is going viral on social media. In a situation where the need for food for the next day can be met only if you work continuously every day, praises are pouring in for this woman who distributes food in a wheelchair and earns an income from it. Some have commented on this video that this woman has realized that continuous struggles will take her to the next stage of life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X