"பஸ், ஆட்டோ தேவையில்லை.. ஒரு சைக்கிள் மட்டும் போதும்" 9 குழந்தைகளுடன் பயணம்! வியந்த நெட்டிசன்கள்
டெல்லி: சைக்கிளில் முன்னும் பின்னுமாக 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஒருவர் ஓட்டிச்செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உலக மக்கள் தொகை 800 கோடியை தொடுவதற்கு இதுபோன்ற நபர்களே காரணம் என்று நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.
ஆடோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி அதிக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதும் போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் போடும் செய்திகளையும் அவ்வப்போது கேள்வி பட்டு இருப்போம்.
மூன்று பேர் மட்டுமே சவுகரியமாக செல்லக்கூடிய ஆட்டோவில் 10 பேரை வரை கூட ஏற்றிக்கொண்டு சென்ற காட்சிகள் கூட இணையத்தில் பரவியிருக்கின்றன.

இணையத்தில் பரவும் வீடியோ
ஆட்டோவில் இத்தனை பேரா என்று பார்ப்பவர்களை வாய் பிளக்க வைக்கும் இந்த சம்பவங்கள் அமையும்.. ஆனால், இதையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு காட்சி இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இருவர் மட்டுமே செல்லக்கூடிய சைக்கிளில் 9 சிறுவர் சிறுமிகளை அள்ளிப்போட்டுக்கொண்டு ஒருவர் அசால்டாக ஓட்டிச்செல்லும் வீடியோ பதிவுதான் தற்போது இணையத்தில் அதிகம் பரவிக்கொண்டு இருக்கிறது.

சைக்கிளில் 9 பேர்
பின் கேரியரில் 3 சிறுவர்கள் அமர்ந்து இருக்க முன்பக்க பார் கம்பியில் 2 குழந்தைகள், முன் சக்கரத்திற்கு மேல் உள்ள கூடையில் ஒரு குழந்தை, சைக்கிள் ஓட்டுபவரை முன்னும் பின்னுமாக பிடித்துக்கொண்டு ஏனைய குழந்தைகள் என மொத்தம் 9 பேருடன் சைக்கிள் செல்கிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.வெளியான சில நாட்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.

இவர்கள் தான் பங்களிப்பு
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து வியந்தும் விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். Jaiky Yadav என்பவர் ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவோடு... உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டு விட்டது. இதுபோன்ற நபர்கள்தான் அதிக பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு கீழே நெட்டிசன்கள் பலரும் சைக்கிள் ஓட்டுபவரின் திறமையை வியந்தும் பதிவிட்டு இருக்கின்றனர்.

அசால்ட்டாக ஓட்டுகிறாரே
சில நெட்டிசன்கள், சைக்கிளில் ட்ரிபிள்ஸ் செல்வதற்கே மூச்சு வாங்கிவிடும். இவர் 9 பேருடன் அசால்ட்டாக ஓட்டுகிறாரே என்று வியந்து பாராட்டியிருக்கின்றனர். சில நெட்டிசன்கள், இந்த நபரை போன்ற பொறுப்பற்ற ஆட்களால் தான் மக்கள் தொகை மித மிஞ்சி சென்றுள்ளது என்று வசைபாடியிருக்கின்றனர். சில நெட்டிசன்கள், வெறும் அட்டையை வைத்து ஒரு புத்தகத்தை மதிப்பிட்டு விடக்கூடாது.. உண்மையில் இது அனைத்தும் அவர்கள் குழந்தையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

உண்மையில் ரொம்ப வலுவானதுதான்
பொதுபோக்குவரத்து வசதி இல்லாததால் உதவியாக கூட குழந்தைகளை அழைத்து சென்று இருக்கலாம் என்று பதிவிட்டு இருக்கிறார். இன்னும் சில நெட்டிசன்கள் ஒரு படி மேலே போய், சைக்கிள் கம்பெனியையும் டயரின் தரத்தையும் பற்றி பதிவிட்டுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இந்த பைசைக்கிளும் டயர் நிறுவனமும் உண்மையில் ரொம்ப வலுவானதுதான்" என்று பதிவிட்டு இருக்கிறார். இணையத்தை கலக்கி வரும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications