ஆதார் கார்டு இருக்குல்ல? இனி மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்! சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: தமிழகத்தில், மின் நுகர்வோர் எண்ணுடன் , ஆதார் எண்ணையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.. இதுகுறித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சொல்லி உள்ளதென்ன?
தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகிறது.. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதை உத்தரவை எதிர்த்து, எம்எல் ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.. ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே, இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
சென்னை ஹைகோர்ட்
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டிலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும்படி மனுதாரரை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.. இதையடுத்து, மனுதாரரும், மறுஆய்வு மனுவை சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தார்.. ஆனால், அந்த மனுவையும் ஹைகோர்ட் ரத்து செய்துவிட்டது.
மீண்டும் தள்ளுபடி செய்த நீதிபதிகள்
இதற்கு எதிராக எம்எல் ரவி, சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் எங்களது தரப்பு கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த மனு, நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மின் நுகர்வோர் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை, மாநில அரசு அதன் கொள்கை முடிவாக மேற்கொண்டுள்ளது. அது மாநில அரசின் கொள்கை சார்ந்த விஷயம்.. இதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.
ஆதாரை இணைப்பது பாதுகாப்புதான்
கடந்த 2023 ம் ஆண்டும், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த வழக்கை அப்போது விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜோசப் மற்றும் நாகரத்னா சொல்லும்போது, "தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட முடியாது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்புதான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications