டெல்லி மதுபான கொள்கை முறைகேடு என்பது சதி திட்டம்.. தீட்டியது பாஜகதான்! சஞ்சய் சிங் எம்பி புகார்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த ஆம் ஆத்மியின் நாடாளுமன்ற குழு தலைவர் சஞ்சய் சிங் நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இந்த வழக்கு ஒரு சதி திட்டம் என்றும், இது பாஜகவால்தான் தீட்டப்பட்டது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட மகுந்தா ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. இந்த விசாரணையின்போது கடந்த பிப்ரவரி 10 முதல் ஜூலை 16 வரை ராகவ் மகுந்தாவிடமிருந்து 7 வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. இதில் 6ல் அவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை சொல்லவில்லை. ஆனால் கடைசியாக ஜூலை 16ம் தேதி வழங்கிய வாக்குமூலத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காரணம் சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட சித்தரவதைதான். அதேபோல, மகுந்தா ரெட்டியின் மகன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர்தான் அவர் தனது வாக்குமூலத்தை மாற்றியிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க பெரிய சதி நடந்துள்ளது. மதுபான ஊழலுக்கு பாஜக தான் காரணம். கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் விமர்சித்துள்ளார்.
இவரது பேட்டி பெரும் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. முன்னதாக இவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. அதில் முக்கியமானது, டெல்லி மதுபான வழக்கு குறித்து பொதுவெளியில் எதுவும் பேசக்கூடாது என்றும், செய்தி ஊடகங்களுக்கு இது குறித்து பேட்டி அளிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்காகும். ஆனால் இதனை மீறி சஞ்சய் சிங் இன்று பேட்டியளித்திருக்கிறார்.
பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை 9 முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கைவிட்டுவிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலின் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. ஏற்கெனவே ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரனையும் சமீபத்தில்தான் அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
ஜெக்ரிவாலின் நீதிமன்ற காவல் கடந்த 1ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை கெஜ்ரிவாலை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 2ம் எண் சிறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 19ம் தேதி நாடு முழுவதும் 22 மாநிலங்களில் முதற்கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது கெஜ்ரிவாலுக்கு காவரை நீட்டித்து வழங்கப்பட்டுள்ள உத்தரவு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications