டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமது குடும்பத்துடன் வாக்களித்தார்.

Aam Aadmi Party will come back to power: Arvind Kejriwal

பின்னர் செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:

என்னுடைய குடும்பத்துடன் இன்று வாக்களித்தேன். என்னுடைய மகன் தற்போது முதல் முறையாக வாக்களித்துள்ளார். அனைத்து இளைஞர்களும் வாக்களிக்க வேண்டும்.

இளைஞர்கள் வாக்களிப்பதால் ஜனநாயகம் வலிமையடையும். பெண்களும் பெருமளவில் வந்து வாக்களிக்க வேண்டும்.

ஐந்து ஆண்டுகாலம் நாங்கள் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+