டெல்லி சட்டசபை தேர்தல்.... ஆட்சியை தக்க வைக்குமா ஆம் ஆத்மி? வெல்லுமா பாஜக?
டெல்லி: தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் களைகட்ட தொடங்கிவிட்டது. தற்போதைய ஆளும் கட்சியான ஆம் ஆத்மி விஸ்வரூப வெற்றியை மீண்டும் பெறுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
டெல்லியில் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் 2015 தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
புதியதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியானது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67ஐ கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அப்போது பாஜகவுக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன.

டெல்லி தேர்தல்
இந்நிலையில் வரும் பிப்ரவரி 8-ல் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 11-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜன.14-ல் வேட்பு மனுத் தாக்கல்
இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜனவரி 14-ல் தொடங்குகிறது. ஜனவரி 24-ந் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசிநாள்.

1.46 கோடி வாக்காளர்கள்
டெல்லி சட்டசபை தேர்தலில் 1.46 கோடி பேர் வாக்காளர்கள் வாக்களிப்பர். 13,750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. சுமார் 90,000 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஆம் ஆத்மி-பாஜக-காங்கிரஸ்
இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் படுதீவிரமாக உள்ளது.

பரபரப்புடன் டெல்லி தேர்தல்
மேலும் காங்கிரஸ் கட்சி எப்படியாவது கவுரவமான வெற்றியைப் பெற விரும்புகிறது. இதனால் டெல்லி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications