Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் ஆம் ஆத்மிக்கு மரண அடி-கொண்டாடித் தீர்க்கும் 'ஹாட்ரிக் ஜீரோ' காங்கிரஸ்.. காரணம் 'பஞ்சாப்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக , தலைநகர் டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. டெல்லியில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் ஹாட்ரிக் ஜீரோவை பெற்ற நிலையிலும் கூட ஆம் ஆத்மியின் கட்சியின் வீழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்றனர் அதன் தலைவர்கள்.

டெல்லியில் 15 ஆண்டுகாலம் அசைக்க முடியாத ஆகப் பெரும் அரசியல் கட்சியாகவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது காங்கிரஸ். ஷீலா தீட்சித்தை முதல்வராக கொண்டு டெல்லியில் 15 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்தது காங்கிரஸ்.

delhi election 2025 delhi election result 2025

ஆனால் 2013-ம் ஆண்டு காங்கிரஸின் பேராதிக்கத்துக்கு முடிவுரை எழுதியது ஆம் ஆத்மி கட்சி. 2008-ம் ஆண்டு டெல்லி தேர்தலில் 43 இடங்களைப் பெற்றிருந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது காங்கிரஸின் வாக்கு சதவீதம் 40.31% .
ஆனால் 2013 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன; காங்கிரஸின் வாக்கு சதவீதமும் 24.55% ஆக சரிந்தது. அன்று புதை குழியில் விழுந்த காங்கிரஸ் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிப் போனது. 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 9.7% ஆகவும் 2020-ம் ஆண்டு தேர்தலில் இதைவிட படுமோசமாக வெறும் 4.26% ஆகவும் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அழிந்தே போனது. இதனால் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மீண்டு எழுமா என்ற சந்தேகம் ஆழப் பதிந்தும் போனது.

இந்த நிலையில் தற்போதைய டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 2.10% அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் சொற்ப வாக்குகளில் தோற்றுப் போக காங்கிரஸின் வாக்குகளும் ஒரு காரணம். 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மியின் வெற்றியை பறித்திருப்பது காங்கிரஸின் வாக்குகள் என்கின்றன தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள்.

காங்கிரஸ் கட்சியின் டெல்லி கோட்டையை எந்த ஆம் ஆத்மி கட்சி கட்சி தகர்த்து நிர்மூலமாக்கியதோ அதே ஆம் ஆத்மியின் 10 ஆண்டுகால ஆட்சியை தோற்கடிக்கச் செய்ததில் தங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கிறதே என கொண்டாடி மகிழ்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.

இது மட்டுமல்ல.. டெல்லியின் ஆம் ஆத்மி தோல்வி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியினரையும் உற்சாகமடைய வைத்துள்ளது. பஞ்சாப் அரசியலில் காங்கிரஸ்தான் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. 2022-ம் ஆண்டு தேர்தலின் போது உட்கட்சி மோதலில் சிக்கி சிதைந்து போனது காங்கிரஸ். இதனால் எளிதாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாநிலத்தில் பாஜகவுக்கு எந்த ஒரு செல்வாக்கும் இல்லை என்பது வெளிப்படையானது. சிரோமணி அகாலிதளமும் தமது செல்வாக்கை இழந்துவிட்டது. இதனால் பஞ்சாப் அரசியல் என்பது ஆம் ஆத்மி vs காங்கிரஸ் என்பதாகவே இருக்கிறது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக போர்க்கொடியும் தூக்கி வருகின்றனர். இதனால் டெல்லி தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பஞ்சாப் பக்கம் கெஜ்ரிவால் கவனம் செலுத்துவார்; அதிகபட்சம் பஞ்சாப் முதல்வராகவும் அரவிந்த் கெஜ்ரிவால் உருமாறுவார் என்றெல்லாம் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஆம் ஆத்மியின் டெல்லி தோல்வி அந்த கட்சியினரை பஞ்சாப்பிலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது; ஆனால் காங்கிரஸ் கட்சியினருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அடுத்த தேர்தலில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை எளிதாக வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் கைப்பற்றும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்கின்றனர் அக்கட்சியின் தலைவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+