கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி புகார்.. டெல்லியில் பரபர!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அவரின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளராக இருந்து வருபவர் பிபவ் குமார். இவரது நியமனம் சட்ட விரோதமானது என அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியும், டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான சுவாதி மாலிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில், ஆம் ஆத்மி கட்சி எம்.பி ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, ஸ்வாதி மாலிவால் முதல்வர் வீட்டில் இல்லை. ஸ்வாதி மாலிவால் புகார் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஸ்வாதி மாலிவால் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவில்லை என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சுவாதி மாலிவால், முதல்வரின் முன்னாள் தனி உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலின் பி.ஏ பிபவ் குவார், சுவாதி மாலிவாலை அடித்தாரா? இதற்கு முதல்வர் அலுவலகம் விளக்கம் அளிக்குமா? என பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் ஆம் ஆத்மி பெண் எம்.பி, டெல்லி முதல்வர் இல்லத்தில் தான் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்த சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications