"ஆடியோ" இருக்கு..! பாஜக கொடுத்த "சீக்ரெட்" ஆஃபர்.. அடித்து ஆடும் மணீஷ் சிசோடியா! காரணமே இதுதானாம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் இப்போது பரபர சூழல் ஏற்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து இப்போது டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரம் தான் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டன.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு புகார் எழுந்து நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெய்டு நடத்தப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

மணீஷ் சிசோடியா
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, மது கொள்கையில் தவறு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார். மேலும், ஆம் ஆத்மியை உடைத்துக் கொண்டு தங்கள் பக்கம் வந்தால் அனைத்து கேஸ்களையும் கிளோஸ் செய்துவிடுவதாகவும் பாஜகவினர் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தச் சூழலில் இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆடியோ
ஆம் ஆத்மி கட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க உதவினார் சிபிஐ வழக்குகளை ரத்து செய்வதாக பாஜகவினர் மணீஷ் சிசோடியாவிடம் கூறிய ஆடியோககள் அவரிடம் இருப்பதாக ஆம் ஆத்மி தரப்பினர் கூறுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், "இந்த நேரத்தில் நாங்கள் அந்த ஆடியோவை வெளியிடத் தேவையில்லை. ஆனால் தேவைப்பட்டால், அந்த தொலைப்பேசி உரையாடலை ஆம் ஆத்மி வெளியிடும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மது கொள்கை
தலைநகர் டெல்லியின் மது கொள்கைகள் தொடர்பாகத் தான் இந்த அனைத்து விவகாரங்களும் தொடங்கியது. தலைநகர் டெல்லி மொத்தம் 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இருப்பினும், இதில் பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டிய நிலையில், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யத் தலைமைச் செயலாளர் நரேஷ் குமாருக்கு ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டார்.

மெசேஜ்
அந்த அறிக்கையின் அடிப்படையில் சில உயர் அதிகாரிகளை சஸ்பென்ட் செய்த ஆளுநர் சக்சேனா, இது தொடர்பாக சிபிஐ ரெய்டிற்கும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்தே ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டு நடந்து இரு நாட்கள் கழித்து மணீஷ் சிசோடியா தனது ட்விட்டரில், "பாஜகவிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. ஆம் ஆத்மியை உடைத்து பாஜகவில் சேர்ந்தால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கேஸ்களை முடித்து வைப்பதாக உறுதி அளித்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

வாய்ப்பில்லை
மேலும், தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்த அவர், ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசியல் குரு என்றும் அவருக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டோம் என்றும் குறிப்பிட்டார். மது கொள்கையில் எவ்வித தவறும் செய்யவில்லை என்றும் இதனால் தான் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக vs ஆம் ஆத்மி
இதைக் கடுமையாக மறுத்துள்ள பாஜக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி சுமத்தி வருவதாகச் சாடியுள்ளது. மேலும், ஆதாரம் ஏதாவது இருந்தால், அதைத் தைரியமாக வெளியிடலாம் என்றும் பாஜகவினர் தெரிவித்தார். இருப்பினும், பாஜக மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளிடம் என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் தேவைப்படும் போது இந்த ஆடியோக்களை நிச்சயம் வெளியிடுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications