Good News.. ஏசி, ஸ்லீப்பர் ரயில் கட்டணம் ரூ.10 மட்டுமே உயர்வு.. ரயில்வேக்கு கிடைக்க போகும் நன்மைகள்
டெல்லி: வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 215 கி.மீ. வரை பயணிப்பவர்களுக்கு ரயில் கட்டண உயர்வு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது, ரயில்வேக்கு தரப்போகும் பயன்கள் குறித்து அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.. அவைகள் குறித்து இங்கே விரிவாக பார்ப்போம்.
இந்தியா முழுவதுமே, 19 மண்டலங்களில், 12,617 பயணியர் ரயில்கள், 11,700க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன..

அந்தவகையில், தினமும் 2.40 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.. இதனால் ரயில்வேக்கு நிறைய வருவாய் கிடைத்து வருகிறது..
ரயில்வே நிர்வாகம்
இதில் சரக்கு பிரிவில் மட்டுமே ரயில்வே வருவாய் 70 சதவீதம் வரை கிடைக்கிறது. ரயில்வே புதிய ரயில் பாதைகள் அமைப்பது, ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்துவது, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கவச் டெக்னாலஜி அறிமுகப்படுத்துவது போன்ற திட்டங்களை தொடர்ந்தும் செயல்படுத்தி வருகிறது.
எனினும், ரயில்வேயின் வருவாயை பெருக்க தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், நாடு முழுவதும் ரயில்வே டிசம்பர் 26 முதல் ரயில் கட்டணத்தில் சிறிய அளவில் உயர்வு செய்யப்படுவதாக ரயில்வே தற்போது அறிவித்துள்ளது.
சாதாரண வகுப்புக்கு நோ, ஏசி பெட்டிக்கு கட்டணம்
அதன்படி, சாதாரண வகுப்பில் 215 கி.மீ. தூரம் வரை பயணிப்பவர்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை. ஆனால் 215 கி.மீ. தூரத்தை மீறும் பயணிகளுக்கு சாதாரண ரயில்களில் ஒரு கி.மீ.க்கு 1 பைசா, மெயில் மற்றும் விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் ஒரு கி.மீ.க்கு 2 பைசா உயர்வு அமல்படுத்தப்படும். இதன் காரணமாக, AC பெட்டியில் 500 கி.மீ. பயணம் செய்தால் ரூ.10 மட்டுமே கட்டணம் அதிகரிக்கும்.
இந்த கட்டண மாற்றம், ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, ரயில்கள் இயக்கச் செலவு போன்ற காரணங்களுக்காக செய்யப்படுகிறது.
புறநகர் ரயில்கள், சீசன் டிக்கெட்
தற்போதைய நிலையில் ரயில்வே ஊழியர்களின் சம்பளம் 1.15 லட்சம் கோடி ரூபாய், ஓய்வூதியம் 60,000 கோடி ரூபாய், மொத்த செயல்பாட்டு செலவு 2.63 லட்சம் கோடி ரூபாய் ஆகிவிட்டது. இதனால், செல்லுபடியான கட்டண உயர்வை மேற்கொண்டு, ரயில்வே இந்த செலவுகளை சமாளிக்க நினைக்கிறது..
ஆனால், புறநகர் ரயில்கள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு எந்தவித உயர்வும் செய்யப்படவில்லை. மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து முக்கியமானதாக உள்ளது. மொத்த ரயில் பயணியரின் 54 சதவீதம் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்கிறார்கள்.. எனவே இந்த பிரிவில் கட்டண உயர்வு செய்யப்படவில்லை.
கட்டண உயர்வு ரூ.600 கோடி வருவாய்
இந்த கட்டண உயர்வானது ரயில்வேக்கு பல வகைகளில் நன்மையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் சில கருத்துக்களை சொல்லி உள்ளனர்.
அதில், "கட்டண உயர்வு பயணிகளுக்கு மிக சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும். இந்த நடவடிக்கையால் இந்த நிதியாண்டில் ரயில்வேக்கு கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகள் விரிவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, சரக்கு போக்குவரத்து விருத்தி போன்ற காரணங்களால் இந்த கட்டண சீரமைப்பை செயல்படுத்துவது அவசியமாகிறது.
இதன் மூலம், நாட்டின் ரயில்வே அமைப்பு தொழில்நுட்பமயமாகவும், பாதுகாப்பானதும், அதிக பயணிகளுக்கு சேவை செய்யக்கூடியதாகவும் மாற்றப்படுகிறது.
சமீபத்திய கட்டண உயர்வு 215 கி.மீ. தூரத்தை மீறும் பயணிகள், மெயில் மற்றும் விரைவு ரயில்களில் AC, ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இப்படி, நீண்டதூர பயணிகளுக்கு சிறிய அளவில் கட்டணம் உயர்த்தி, மொத்த வருவாயை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரயில்வே நடவடிக்கை எடுக்கிறது.
ஐந்து வழிகளில் உதவும்
சுருக்கமாக சொல்லப்போனால், அதிக கட்டணத்தில் ரயில்வே வருமானம் அதிகரிக்கும். இதனால் சேவை மேம்பாட்டிற்கும் பராமரிப்பிற்கும் நிதி கிடைக்கும். இரண்டாவதாக, இந்த வருமானத்தை பயன்படுத்தி ரயில் நிலையங்கள், தளங்கள், பாதுகாப்பு, பராமரிப்பு போன்றவை மேம்படுத்தப்படலாம்.
மூன்றாவதாக, ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவுகள் சமநிலை செய்ய உதவும். நான்காவதாக, அதிக வருமானம் புதிய ரயில்கள் வாங்கும், சேவைகளை விரிவாக்கும் வாய்ப்பையும் தரும். ஐந்தாவதாக, குறுகிய பயணங்களுக்கு கட்டண உயர்வு இல்லாததால், நாள்தோறும் பயணிப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மொத்தத்தில் கட்டண உயர்வு ரயில்வே சேவையை மேம்படுத்த, பராமரிப்பை உறுதி செய்ய, எதிர்காலத்தில் பயண அனுபவத்தை நல்லதாக மாற்ற உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications