கண்ணுக்கு மருந்தா? "அந்த" நேரத்துலயா அங்க போவீங்க?என்ன வயசாச்சு? எஸ்வி. சேகர் கேஸில் அதிரடி தீர்ப்பு
டெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேசிய வழக்கில், எஸ்வி சேகர் தாக்கல் செய்த மனுவில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி ஃபேஸ்புக்கில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய அவதூறாக, பிரபல நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி சேகர் பதிந்திருந்தார்.
நிறைய வழக்குகள்: இதற்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.. இதேபோல, நெல்லை, கரூர், அம்பத்தூர் கோர்ட்டுகளிலும் பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோபால்சாமி, தலித் பாண்டியன், எஸ்.சேகரன் ஆகியோரும் தனித்தனியாக எஸ்வி சேகர் மீது வழக்கு தொடர்ந்தார்கள்.
இதையடுத்து, தன் மீதான அனைத்து வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஹைகோர்ட்டில் எஸ்.வி.சேகர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது.

எஸ்வி சேகர் சார்பில் "பத்திரிகையாளர்கள் குறித்த ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவை உடனே அகற்றி விட்டேன். அதுக்காக நான் மன்னிப்பும் கேட்டு விட்டேன். இந்த பதிவை அமெரிக்காவில் உள்ள திருமலை சடகோபன் வெளியிட்டிருந்தார். அந்த பதிவைத்தான் மறுபதிவு செய்தேன். அதனால் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
படிச்சவர்: இது தொடர்பான விசாரணை முடிந்த நிலையில், எஸ்வி சேகரின் வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு கூறியிருந்தார். அதில், மனுதாரர் படிச்சவர், சமூகத்தில் பிரபலமானவர். எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதுபோன்ற நபர்கள் இதுபோல பதிவை வெளியிட்டால், அது நமது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.
அதுமட்டுமின்றி எஸ்வி சேகர் முகநூல் பக்கத்தை 5 ஆயிரம் பேர் பின்தொடர்வதாக அவரே சொல்கிறார். அந்த 5 ஆயிரம் பேரும், அந்த பதிவை மறுபதிவு செய்திருந்தால்? சாதாரண மனிதர்கள் பதிவு வெளியிடுவதிலும், மனுதாரரை போன்ற பிரபலமான நபர்கள் வெளியிடுவதிலும் பெரும் வித்தியாசம் இருக்கிறது.. அதனால், யாராக இருந்தாலும் சரி, இதுபோன்ற ஒரு பதிவை வெளியிடுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டும். எனவே, எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது.
விசாரணை முடிவு: இவர் மீது பல்வேறு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் சென்னையில் உள்ள எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உடனே மாற்ற வேண்டும். இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க வேண்டும்" என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இதையடுத்து, சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் எஸ்வி சேகர் மனு தாக்கல் செய்தார்.. அந்த மனுவானது, நீதிபதி பி.ஆர். கவாய், பி.கே. மிஷ்ரா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
SEND பட்டன்: அப்போது, எஸ்வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகமுத்து, "எஸ்வி சேகர் கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டு இருந்தபோது, தவறுதலாக அவரது கை விரல்கள் "send" பட்டனை அழுத்திவிட்டது.. அதனால், அந்த பதிவு, தானாகவே, "ஃபார்வர்டு" ஆகிவிட்டது என்று கூறினார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், "கண்ணுக்கு மருந்து போட்டுக்கொண்டிருந்தபோது, அவர் ஏன் சோஷியல் மீடியா செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.

வாழ்வின் ஓர் அங்கம்: இதற்கு பதிலளித்த நாகமுத்து, "சமூக ஊடகங்கள் வாழ்வின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது.. அதை எல்லாம் தவிர்ப்பது ரொம்ப கஷ்டம்" என்று பதிலளித்தார்..
உடனே நீதிபதிகள், "சமூக ஊடகங்கள் மிகவும் அவசியம் என்று நாங்கள் ஒன்றும் கருதவில்லை.. சமூக ஊடகங்களில் இருந்து நீங்கள் விலகி இருக்கிறீர்கள்.. சரி, எஸ்.வி.சேகருக்கு என்ன வயதாகிறது? " என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, "அவருக்கு 72 வயதாகிறது" என்று நாகமுத்து சொன்னார்.
நீதிபதிகள்: அப்போது நீதிபதிகள், "இந்த வயதில்தான் அவர் இதையெல்லாம் செய்கிறாரா? அவர் ஏன் சோஷியல் மீடியா செய்தியை ஃபார்வர்டு செய்ய வேண்டும்? சமூக ஊடகத்தை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவில் நாங்கள் தலையிட முடியாது.. அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகளையும் ரத்து செய்ய முடியாது" என்று கூறி, அவதூறு வழக்கில் எஸ்வி சேகர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஒரேடியாகதள்ளுபடி செய்துவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications