நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியை பெண்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்! அழைப்பு விடுத்த ப்ரீத்தி அதானி
டெல்லி: அதானி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தி அதானி, 'விக்சித் பாரத் 2047' இலக்கை அடையும் இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெண்கள் மையச் சிற்பிகளாகத் திகழ்வதாக வலியுறுத்தியுள்ளார். நீடித்த பொருளாதாரப் பங்களிப்புடன், நிதி, திறன்கள், தலைமைப் பொறுப்புகளுக்கான வாய்ப்புகள் பெண்களுக்கு அவசியம் என அவர் அழைப்பு விடுத்தார்.
டெல்லியில் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை (CRF) ஏற்பாடு செய்த "சஷக்த் நாரி, விக்சித் பாரத்" மாநாட்டில் டாக்டர் ப்ரீத்தி உரையாற்றினார். இந்திய வளர்ச்சிப் பாதையில் பெண்களின் ஆற்றலை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார். மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவியையும் வரவேற்று, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான அரசின் கொள்கை உத்வேகத்தைப் பாராட்டினார்.

அதானி
ஆனால், கொள்கை நோக்கங்களைத் தாண்டி, அனைத்துத் துறைகளிலும் பெண்களின் நீடித்த பொருளாதாரப் பங்களிப்பை உறுதி செய்வது முக்கியம் என்றார். அதிகாரமளித்தலுக்கு அணுகலை அனுமதிப்பதே அடிப்படை என்பதை அறக்கட்டளையின் களப் பணிகளிலிருந்து அவர் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குறைந்த கல்வி முறை கொண்ட கிராமப்புறங்களில், அறக்கட்டளை ஆதரவு பெறும் பெண் விவசாயிகளுக்கு எளிதில் பயன்படுத்தக்கூடிய விவசாய மொபைல் செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நீர்ப்பாசனம், உரப் பயன்பாடு, விதை தேர்வு, சந்தை விலை கண்காணிப்பு போன்றவற்றுக்கு இந்தச் செயலிகள் வழிகாட்டின. இந்தத் தகவல்கள் பெண்களின் உற்பத்தித் திறன், வருவாய், நம்பிக்கையை மேம்படுத்தின.
பால்வளத் துறை
பால்வளத் துறையில், சுயஉதவிக் குழுக்கள் ஆபரேஷன், வருவாய் ஈட்டும் திறனைக் கணிசமாக உயர்த்தியுள்ளது. தற்போது 3,500க்கும் மேற்பட்ட பெண்கள் பால் சேகரிப்பு மையங்களை நிர்வகிக்கின்றனர். இவை ஆண்டுக்கு 75 லட்சம் லிட்டருக்கும் அதிகமான பாலைக் கையாளுகின்றன. வெளிப்படையான விலையிடும் முறைகள், தரப் பரிசோதனை, ஒழுங்கமைக்கப்பட்ட கொள்முதல் ஆகியவை பெண்களின் வருவாய் நிலைத்தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. இதுவே பெண்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது.
அறக்கட்டளையின் 'சுபோஷன்' திட்டம் 3.25 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களின் சுகாதார மேம்பாட்டுக்கு உதவியது. 'சுவாபிமான்' திட்டம் 300 சுயஉதவிக் குழுக்களில் உள்ள 4,500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கியுள்ளது.
பெண்கள் வளர்ச்சி
பெண்கள் வளர்ச்சி என்பது சாதாரணச் சமூக சேவை மட்டுமில்லை. திறன்கள், நிதி, சந்தைகள், தலைமைப் பொறுப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதே அதன் நோக்கம் என டாக்டர் அதானி தெளிவுபடுத்தினார். மத்திய பட்ஜெட்டின் சுயஉதவி திட்டம் முக்கியமானது என்றும் அது பெண்களைத் தொழில்முனைவோராக மாறுவதன் மூலம் வளர்ச்சி உறுதி செய்யும் என்றார்.
பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பு இந்தியாவின் நீண்டகால செழிப்புக்கு அடிப்படையாகிறது என்றும் அவர் வலியுறுத்தினார். கட்டமைக்கப்பட்ட தடைகளை நீக்கி, வாய்ப்புகளை விரிவுபடுத்துமாறு நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்தகட்ட வளர்ச்சி
இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது நம்பிக்கையான பெண்களால் வழிநடத்தப்படும் வகுப்பறைகள், பயிற்சி மையங்கள், கிராமப்புற நிறுவனங்கள், டிஜிட்டல் சந்தைகளில் உருவாகும். பெண்களுக்கு வாய்ப்பளித்தால் நிச்சயம் அவர்கள் புதிய சாதனைகளைப் படைப்பார்கள் எனக் கூறி ப்ரீத்தி அதானி தனது உரையை நிறைவு செய்தார்.












Click it and Unblock the Notifications