ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் விசாரணை நிறைவு! அதானி குழுமத்தின் மீது எந்தவொரு தவறும் இல்லை! செபி அறிவிப்பு
டெல்லி: அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பங்கு முறைகேடு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இருந்த நிலையில், இந்தியப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபி (SEBI) அதை நிராகரித்துள்ளது. அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் போன்ற நிறுவனங்களின் மீது தவறில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அட்கார்ப் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் (Adicorp Enterprises Pvt. Ltd.) நிறுவனம், பல்வேறு அதானி நிறுவனங்களிடமிருந்து அதானி பவருக்கு நிதியைத் திருப்பிவிடப் பயன்படுத்தப்பட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் சில மாதங்களுக்கு முன்பு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்பது பிரபலமான ஷார்ட்-செல்லிங் நிறுவனமாகும்.

2020ஆம் ஆண்டில் நான்கு அதானி குழும நிறுவனங்கள் அட்கார்ப் (Adicorp) மூலம் அதானி பவருக்கு மொத்தம் ₹6.2 பில்லியன் (சுமார் $87.4 மில்லியன்) கடன் வழங்கின. இந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக இருக்கும் சூழலில் கடன் குறித்த விவரங்கள் அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளில் இடம்பெறவில்லை என்றே ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
அட்கார்ப் இந்த நிதியை வைத்து அதானி பவருக்கு ₹6.1 பில்லியன் (சுமார் $86 மில்லியன்) கடனாக வழங்கியதாக ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியிருந்தது. இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துச் செபி விசாரணை நடத்தியது. அதில் அட்கார்ப் தொடர்பான பரிவர்த்தனைகளிலும், அதானி பவருக்கான கடன்களிலும் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்பதைச் செபி கண்டறிந்துள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Deeply feel pain of investors who lost money because of 'fraudulent and motivated' Hindenburg report, says Gautam Adani
— Press Trust of India (@PTI_News) September 18, 2025
முன்னதாக இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து செபி விரிவான விசாரணையை நடத்தியது. இந்தப் பரிவர்த்தனைகள் செபியின் LODR விதிகளை மீறுகின்றனவா அல்லது செபி சட்டத்தின் கீழ் தவறான நிதி அறிக்கையாக இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
விசாரணையில், இந்தக் குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் ஒரே நிறுவனத்திற்குள்ளான பரிவர்த்தனை என்ற வரையறைக்குள் வரவில்லை என்றும், எந்தவொரு விதிமீறல் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் செபி முடிவு செய்தது. எனவே, அதானி குழும நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
தங்கள் நிதி நடைமுறைகள் வெளிப்படையானவை என்றும், அனைத்துச் சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் பின்பற்றுகிறோம் என்றே அதானி குழுமம் தொடர்ந்து கூறி வந்தது. மேலும், தங்கள் நிறுவனங்கள் எந்தவொரு விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தொடர்ந்து மறுத்து வந்தது.
செபியின் இந்த முடிவு, அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. பங்குச் சந்தை ஆபரேஷனை பாதிக்கும் வகையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகச் சொல்லி சில குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்த ஹிண்டன்பர்க் முயன்றாலும், செபியின் கண்டுபிடிப்புகள் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்கிறது. மேலும், அவர்களின் பரிவர்த்தனைகளின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்தின.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு பல மாதங்களாக நீடித்த நீடித்த குழப்பத்திற்குச் செபி விசாரணை அறிக்கை ஒரு தெளிவைக் கொடுக்கிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications