Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி.. அமித்ஷா - எடப்பாடி சந்திப்பில் முடிவு! அண்ணாமலையும் இருக்காரே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசிய நிலையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அதிமுக பொதுச்செயலாளராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அதன் பின்னர் முதல்முறையாக இன்று டெல்லிக்கு சென்றார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் டெல்லிக்கு சென்றனர்.

ADMK - BJP alliance in 2024 loksabha election confirmed in EPS - Amit Shah meeting

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் குழு இரவு டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு சென்றது. அங்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் புகைப்படங்களை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

50 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அமித்ஷாவும், ஜேபி நட்டாவும் வாழ்த்து தெரிவித்ததாகவும், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் ஏற்பட்டு இருக்கும் விரிசல் குறித்து விரிவாக பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தின் இறுதியில் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ADMK - BJP alliance in 2024 loksabha election confirmed in EPS - Amit Shah meeting

இதில் குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு விவகாரம் வரை இரு கட்சிகளின் தலைவர்களும் பேசி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 2024 தேர்தலில் கூடுதலாக ஒரு இடத்தை பாஜக கேட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக வலுவாக இருக்கும் கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைவர்களிடம் அமித்ஷாவும் ஜேபி நட்டாவும் கேட்டுக்கொண்டதாகவும், இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்தால் மட்டுமே சீக்கிரம் தேர்தல் பணிகளை தொடங்க முடியும் என்று கூறியதாக பேசப்படுகிறது.

கூட்டணியில் இடம்பெறக்கூடிய பிற கட்சிகள், அவற்றில் வலுவான கட்சிகள் எவை என்பது குறித்து பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் வியூகங்களை வகுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார்கள். கடந்த சில மாதங்களாகவே அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் நிலவி வந்த நிலையில், எதிர்காலத்தில் விரிசலை ஏற்படுத்தும் எந்த செயல்பாடுகள் இருக்காமல் சுமூகமாக செயல்படும் என்று அமித்ஷா உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக காரணம் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைத்துக் கொண்டது என பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வந்தன.

அதன் தொடர்ச்சியாக பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தொண்டராக கட்சியில் தொடர்வேன்." என்று எச்சரித்தார். இதனால் கூட்டணியில் விரிசல் மேலும் பெரிதானதாக கூறப்பட்ட நிலையில் தற்போதைய டெல்லி சந்திப்பால் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+