அலர்ட்..!வேகமாக பரவுகிறது டெல்டா +.. தமிழகம் உட்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய வார்னிங்.. ஏன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேகமாகப் பரவும் டெல்டா பிளஸ் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    COVAXIN, COVISHIELD தடுப்பூசி பயனளிக்குமா? | Dr. Dr.Shanthi ravindranath Explain | Oneindia Tamil

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா பிளஸ் கொரோனா புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்த புதிய வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்புகளைக் கண்டறியத் தேவையான மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    என்ன செய்ய வேண்டும்

    என்ன செய்ய வேண்டும்

    ஒரே பகுதியில் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அங்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. மேலும், கொரோனா சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் முன்னுரிமை அடிப்படையில் வேக்சின்கள் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்ட ராஜஸ்தான், தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு இது தொடர்பாக மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    டெல்டா பிளஸ்

    டெல்டா பிளஸ்

    டெல்டா வகை கொரோனாவின் ஒரு பிறழ்வு தான் டெல்டா பிளஸ் கொரோனா. டெல்டா வகை கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனாவை பட்டியலிட்டுள்ளது. மேலும், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக வேக்சின்களின் பலன் குறைகிறது. அதேபோல ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தோன்றும் ஆன்டிபாடிகளால் கூட டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராகக் குறைவாகவே பலன் அளிக்கிறது.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    டெல்டா கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும். இந்த வகை கொரோனாவை தக்க நேரத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் 3ஆம் அலை ஏற்படும் ஆபத்துகளும் அதிகம். ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் கொரோனா அடுத்த அலைக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளன. எனவே, வேக்சின் பணிகளை அதிகப்படுத்தி, பொதுமக்கள் கொரோனா வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

    கவலைக்குரிய கொரோனா

    கவலைக்குரிய கொரோனா

    டெல்டா பிளஸ் கொரோனாவை மத்திய அரசு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 20 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம் என்றும் அது டெல்டா பிளஸ் கொரோனாவால் ஏற்படலாம் என்றும் மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    வேக்சின் முக்கியம்

    வேக்சின் முக்கியம்

    நாட்டிலேயே மத்தியப் பிரதேசத்தில் தான் டெல்டா பிளஸ் கொரோனாவால் முதல் உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. அங்கு மொத்தம் 5 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு இருந்தது. அதில் வேக்சின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட 4 பேர் டெல்டா உருமாறிய கொரோனாவை வென்றனர். வேக்சின் எடுத்துக் கொள்ளாத நபரே கொரோனாவால் உயிரிழந்தார். எனவே, அதிகப்படியான மக்கள் விரைவாகத் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+