“பெண் ரோபோ”.. இஸ்ரோவின் அடுத்த பாய்ச்சல் - வயோமித்ரா விண்வெளிக்கு போகுதாம்! வேற லெவல் அப்டேட்
டெல்லி: சந்திரயான் 3 வெற்றியின் மூலம் உலகத்தின் பார்வையை இந்தியா மீது திரும்பி பார்க்க வைத்து இருக்கும் இஸ்ரோ, பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது.
நிலவின் தென் துருவத்துக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்துகொண்டு இருக்கும் நிலையில், முதல் நாடாக நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பி சாதித்து உள்ளது இந்தியா. இஸ்ரோ விஞ்ஞானிகள்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ககன்யான் திட்டத்தில் வயோமித்ரா என்ற பெயரில் பெண் ரோபோட்டை அனுப்ப இருக்கிறோம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ககன்யான் திட்டம் தாமதமானது. அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரம் முதல் சோதனை ஓட்டத்தை தொடங்க இருக்கிறோம். விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவது எவ்வளவு முக்கிய அதேபோல் அவர்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வருவது முக்கியம்.
2 வது திட்டத்தில் மனிதர்களை போன்றே செயல்படும் பெண் ரோபோ விண்ணில் அனுப்பப்பட உள்ளது. அதன் பெயர் வயோமித்ரா. எல்லாம் நன்றாக நடந்தால் அதை அடுத்தக்கட்டத்துக்கு நாங்கள் கொண்டு செல்வோம். நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர் தரையை தொடும்போது எனக்கு அவ்வளவு திருப்தியாக இருந்தது.
இஸ்ரோ குழுவினருடன் இணைந்து செயல்பட்ட அனைவருமே பதற்றத்துடன் இணைந்தோம். என்னுடைய முதல் பதற்றமான நிலை என்பது சந்திரயான் 3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையை விட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்று, பத்திரமாக மென்மையாக தரையிறங்கும் நிலைதான்.
நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியது என்பது இந்தியா மற்றும் இஸ்ரோவின் குவாண்டம் ஜம்ப் ஆகும். இதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளி துறையை வெளிப்படையாக திறந்து விட்டதே. 2019 ஆம் ஆண்டில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவின் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.
ஆனால், இம்முறை பத்திரிகையாளர்களும் பள்ளி மாணவர்களும் உள்ளே அழைக்கப்பட்டு உள்ளார்கள். தற்போது அதை மக்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். விண்வெளி திட்டத்துக்கான நிதி பங்களிப்பும் அதிகரித்து இருக்கிறது." என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications