உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்ந்து மாஜி தலைமை தேர்தல் கமிஷனர் மீதும் பாஜக நிஷிகாந்த் துபே வன்மம்
டெல்லி: ஆளுநர்கள் வழக்கு, வக்பு சட்டம் வழக்கு விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தை மிக கடுமையாக விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தற்போது, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியை, மத அடிப்படையில் மிக மோசமாக இழிவுபடுத்தி விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக எம்பியான நிஷிகாந்த் துபே, கடுமையான சர்ச்சைகளில் சிக்கியவர். நாடாளுமன்றத்தில், தமிழ் மொழியை விட சமஸ்கிருதமே உயர்வானது என பேசி கடும் கண்டனங்களை எதிர்கொண்டவர்.

மேலும் உச்சநீதிமன்றத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் மிகவும் காட்டமாக விமர்சித்து கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறார் நிஷிகாந்த் துபே. தமிழக அரசின் ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு, வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை விமர்சித்த நிஷிகாந்த் துபே, நாட்டின் நடைபெறும் மத யுத்தங்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் பொறுப்பு என குற்றம்சாட்டினார். மேலும் உச்சநீதிமன்றம் எப்படி ஜனாதிபதிக்கு உத்தரவிட முடியும்? சட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றம் முடிவெடுத்தால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடிவிடலாமா? என்றும் அசட்டுத்தனமான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறார் நிஷிகாந்த் துபே. இதனால் பாஜக தலைவர் ஜேபி நட்டாவும், நிஷிகாந்த் துபேவின் கருத்துகள் கட்சியின் கருத்துகள் அல்ல என எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியை மத அடிப்படையில் விமர்சித்துள்ளார் நிஷிகாந்த் துபே. வக்பு சட்டம் தொடர்பாக எஸ்.ஒய். குரேஷி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வக்பு சட்டம் மூலம் இஸ்லாமியர் நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார் குரேஷி.
இதற்கு பதிலளித்துள்ள நிஷிகாந்த் துபே, நீங்கள் தலைமை தேர்தல் ஆணையராக இல்லை.. முஸ்லிம்களின் கமிஷனராகத்தான் பணியாற்றினீர்கள். உங்களது பதவி காலத்தில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேச ஊடுருவல்காரர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இஸ்லாம் மதம் கிபி 712-ல் தான் இந்தியாவுக்குள் வந்தது. அதற்கு முன்னர் இந்துக்களாக, பழங்குடியினராக, ஜைனர்களாக, பவுத்தர்களாக மட்டுமே இருந்தோம். இந்த நாட்டின் ஒற்றுமை பாகிஸ்தான் பிரிவினை மூலம் சீர்குலைக்கப்பட்டது; ஆகையால் வரலாற்றை படிக்க வேண்டும் என சாடியுள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications