டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னையா டம்மியாக்குறீங்க.. சீறும் சித்து.. ராகுல் காந்தியுடன் அவசர சந்திப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: உள்ளாட்சி துறையை முதல்வர் அமரீந்தர்சிங் பறித்துக் கொண்ட நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, திடீரென டெல்லியில் இன்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

"காங்கிரஸ் தலைவரை இன்று சந்தித்தேன். எனது கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். நிலைமை என்ன என்பதை அவரிடம் விளக்கினேன்" என்று நவ்ஜோத் சிங் சித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

After Ministry Snub Navjot Singh Sidhu meets Rahul Gandhi

இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஆகியோரும் உடனிருந்தனர்.

பஞ்சாப் மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் அந்தஸ்திலிருந்த, நவ்ஜோத் சிங் சித்துவிற்கும், அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங்கிற்கும் ஏழாம் பொருத்தம். நடைபெற்ற லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக, இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

முதல்வர் கூட்டிய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காமல் சித்து கல்தா, கொடுத்தார். இந்த நிலையில், அவரிடம் கூடுதலாக இருந்த உள்ளாட்சி துறை அமைச்சக பொறுப்பை முதல்வர் பறித்துக்கொண்டார் முதல்வர். முக்கியமான இந்த துறையை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார் அமரீந்தர்சிங்.
சுற்றுலாத்துறை அமைச்சகம் மட்டும், சித்துவிடம் உள்ளது.

மமதாவின் தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர்- பச்சைகொடி காட்டிய நிதிஷ்! மமதாவின் தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோர்- பச்சைகொடி காட்டிய நிதிஷ்!

இதையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியது. இந்தச் சூழ்நிலையில்தான் ராகுல் காந்தியை சித்து, சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் இருந்த நவ்ஜோத் சிங் சித்து 2017 ஆம் ஆண்டு, பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Punjab minister and Congress leader Navjot Singh Sidhu on Monday met party president Rahul Gandhi in Delhi and apprised him of the "situation" in the state, days after Chief Minister Amarinder Singh divested him of the crucial local government department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X