எங்களுக்கும் "லீகல் பாதுகாப்பு" தேவை.. பைசர், மாடர்னாவை தொடர்ந்து.. மத்திய அரசிடம் கேட்கும் சீரம்!
டெல்லி: பைசர், மாடர்னா நிறுவனங்களை தொடர்ந்து தங்களுக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வேக்சின்களை விற்பனை செய்வதற்காக வெளிநாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஆனால் கடந்த டிசம்பரிலேயே வேக்சின் விற்க முன்வந்த பைசர் நிறுவனத்திடம், இந்தியாவிலும் டெஸ்ட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது.
இந்தியாவில் வேக்சின் சோதனை செய்தால் மட்டுமே அனுமதி தருவோம் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்த காரணத்தால் பைசர் வேக்சின் இந்தியாவில் விற்கும் முடிவை கைவிட்டது. இந்த நிலையில் தற்போது வேக்சின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது.

சலுகை
அதன்படி மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்களின் வேக்சினுக்கு லீகல் பாதுகாப்பு கொடுக்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. அதோடு உலக சுகாதார மையத்தால் அனுமதிக்கப்பட்ட கொரோனா வேக்சின்களுக்கு இந்தியாவில் டெஸ்ட் செய்யாமலே அனுமதி வழங்கவும் முடிவிலும் மத்திய அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மாடர்னா, பைசர் நிறுவனங்களுக்கு இந்தியாவில் கதவை திறந்து விடும் வகையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு
லீகல் பாதுகாப்பு என்பது பெரும்பாலான வேக்சின் நிறுவனங்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை ஆகும். இதை indemnity பாதுகாப்பு என்று அழைப்பார்கள். இந்த பாதுகாப்பை பெறுவதன் மூலம், வேக்சின்களை எடுத்துக்கொள்ளும் நபர்கள் யாரும், அதனால் பக்க விளைவு ஏற்பட்டால், வேக்சின் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது. உதாரணமாக பைசர் நிறுவனத்திற்கு லீகல் பாதுகாப்பு இருந்தால், அந்த வேக்சினை எடுக்கும் யாரும், அந்த நிறுவனத்திற்கு எதிராக கேஸ் போட முடியாது.
Recommended Video

அரசு ஈர்க்கும்
இந்த நிறுவனங்களின் வேக்சினுக்கான சட்ட ரீதியான பொறுப்புகளை அரசே ஏற்கும். இந்தியாவில் வேக்சின்களை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த சலுகையை வழங்கும் திட்டத்தில் இந்தியா இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இதே சட்ட ரீதியான பாதுகாப்பை எங்களுக்கும் வழங்க வேண்டும் என்று ஆஸ்ட்ரா செனகாவின் கோவிட்ஷீல்ட் வேக்சினை தயாரிக்கும் சீரம் நிறுவனமும் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தகவல்
மாடர்னா, பைசர் நிருவனங்களுக்கு லீகல் பாதுகாப்பு வழங்கினால் எங்களுக்கும் வழங்க வேண்டும், ஏன் எல்லா வேக்சின் நிறுவனங்களுக்கும் லீகல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் மத்திய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக யாருக்கும் லீகல் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications