119 கால வரலாற்றில் முதல் முறை.. ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தவர் நியமனம்.. யார் இந்த சதீஷ்?
டெல்லி: ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த ஐஆர்எம்எஸ் அதிகாரி சதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் கடந்த 119 கால வரலாற்றில் முதல் முறையாக பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் ரயில்வே வாரியத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் இருப்பவர் ஜெயா வர்மா சின்ஹா. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் இந்த பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். ரயில்வே வாரியத்தின் தலைவர் பொறுப்பில் பெண் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஜெயா வர்மா சின்ஹா அந்த வரலாற்றை மாற்றினார். அவர் ரயில்வே வாரிய தலைவராக பொறுப்பேற்றதன் மூலம் அந்த பதவியில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமைக்கு ஜெயா வர்மா சின்ஹா சொந்தாக்காரரானார்.
தற்போது பொறுப்பு வகித்து வரும் ஜெயா வர்மா சின்ஹா வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால் ரயில்வே வாரியத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கி வந்தது. இந்நிலையில் தான் இந்தியன் ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக சதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் கடந்த 119 ஆண்டு வரலாறு மாறியுள்ளது.
அதாவது இந்தியன் ரயில்வே வாரியம் என்பது ஆங்கிலேயர் காலத்தில் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு ரயில்வே வாரிய தலைவராக எந்த பட்டியலினத்தவரும் நியமனம் செய்யப்பட்டது இல்லை. ஆனால் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள சதீஷ் குமார் பட்டியலினத்தை சேர்ந்தவர். தற்போது முதல் முறையாக பட்டியலினத்தை சேர்ந்த சதீஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் கடந்த 119 ஆண்டு கால வரலாறு மாறி உள்ளது.
தற்போது ரயில்வே வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சதீஷ் குமார் இந்த பொறுப்பில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் இந்த பொறுப்பில் செயல்பட உள்ளார். இவர் கடந்த 1986ம் ஆண்டில் இந்தியன் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தார். ஐஆர்எஸ்எம்இ அதிகாரியாக அவர் பணிக்கு சேர்ந்தார்.
கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். ரயில்வேயில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி முதல் அவர் வடக்கு மத்திய ரயில்வே (பிரக்யாராஜ்) பொது மேலாளராக பதவி வகித்து வரும் நிலையில் தற்போது ரயில்வே வாரிய தலைவர் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications