அட இது தமிழகத்தின் ஸ்பெஷலாச்சே! ஜி20 மாநாட்டையொட்டி மோடியின் கவர் போட்டோவை பாருங்க! அடித்தூள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி20 உச்சி மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தின் முகப்பு பக்கத்தை தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாற்றி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் இன்று முதல் டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி அறிவுரையின்படி மத்திய அமைச்சர்கள் வரவேற்று வருகின்றனர்.

Ahead of G20 Summit PM Modi changes his X cover photo its from Tamil Nadus Nataraja Statue

நாளை முதல் 2 நாட்கள் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஜி20 மாநாட்டையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் (இதற்கு முன்பு ட்விட்டர்) முகப்பு படத்தை திடீரென மாற்றம் செய்துள்ளார்.

அதாவது ஜி 20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலையை காண்பிக்கும் வகையில் அவர் தனது முகப்பு பக்கத்தை மாற்றம் செய்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த செயல் என்பது தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

ஏனென்றால் அந்த முகப்பு படத்தில் இடம்பெற்றுள்ள நடராஜர் சிலை தமிழகத்தில் உருவாக்கப்பட்டதாகும். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் தான் இந்த சிலை என்பது வடிவமைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, லெட், காப்பர், டின், பாதரசம், இரும்பு, ஜிங் உள்ளிட்டவற்றின் கலவையுடன் கலைநுட்பத்துடன் இந்த சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.

மொத்தம் 19 டன் எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை மொத்தம் 28 அடி உயரம் கொண்டது. இதன்மூலம் இந்த சிலை தான் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது. நடராஜர் நடனம் ஆடுவதை குறிக்கும் தமிழ் கலாசாரம் நிறைந்த இந்த சிலையை ஜி20 மாநாட்டில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பமாகும்.

இதையடுத்து தான் அந்த சிலை சோழர் கால நடராஜர் சிலை போல் வெண்கலத்தில் கலைநயமிக்க தமிழ்நாட்டு கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது. இந்த சிலையை தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்த புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதியின் மகன்கள் வடிவமைத்துள்ளனர்.

அதாவது அவரது மகன்களான ஸ்ரீகண்ட ஸ்தபதி, ராதாகிருஷ்ண ஸ்தபதி மற்றும் சுவாமிநாத ஸ்தபதி ஆகியோர் கலை நயத்துடன் வடிவமைத்தனர். மேலும் இவர்களுடன் சிலை வடிவமைப்பு பணியில் சதாசிவம், கவுரிசங்கர், சந்தோஷ் குமார், ராகவன் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+