ஆஹா இது என்ன புது பிரச்சனை? ஷாக் ஆன அதிமுக எம்பி தம்பிதுரை! மாநிலங்களவையிலேயே போலி கையெழுத்தா?
டெல்லி: மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பெயரில் போலி கையெழுத்து போடப்பட்டதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உட்பட அம்மாநில அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் டெல்லி மாநில அரசுக்கு சாதகமாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்தால் டெல்லி யூனியன் பிரதேச அரசின் உரிமை பறிபோகும் என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு எதிராக தொடர்ந்து பேசி வந்த நிலையில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவைப் பெற்று வந்தார்.
பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற அவர், எதிர்க்கட்சிகளைச் சந்தித்து மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக பேச வலியுறுத்தினார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோரினார்.
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு வந்த அர்விந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் குரல் கொடுக்க கோரிக்கை விடுத்தார். திமுகவும் சம்மதம் தெரிவித்தது. டெல்லி அதிகாரிகள் நியமன சட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனே இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணைந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. மக்களவையில் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதிலும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த எதிர்ப்பை பதிவு செய்தாலும் ஆளும் கட்சி மற்றும் நடுநிலை கட்சிகளின் எம்பிக்களுடைய ஆதரவால் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இந்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானத்தை ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை, பிஜு ஜனதா தளம் எம்பி சஸ்மித் பத்ரா, பாஜக எம்பிக்கள் சுதன்ஷு திரிவேதி, பான்க்நான் கோன்யோக், நர்ஹாரி அமின் ஆகியோரும் ஆதரவாக கையெழுத்திட்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தாங்கள் அதற்கு கையெழுத்திடவில்லை என மறுத்துள்ளனர். ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு இருப்பதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தம்பிதுரை அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கையில், "30 - 40 ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்வை நான் பார்த்ததில்லை. இந்த விவகாரத்தை முக்கிய பிரச்சனையாக எடுத்துக்கொள்வோம்." என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications