டெல்லியில் அதிமுக அலுவலகம் தயார்! புதிய கட்டிடத்தை இஞ்ச் பை இஞ்சாக பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி!
டெல்லி: அதிமுகவுக்கு தலைநகர் டெல்லியில் பிரமாண்ட அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதனை நேரில் பார்வையிட்டு சில புதிய யோசனைகளை வழங்கியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அக்கட்சிக்கு கிடைக்கச் செய்தது. இதையடுத்து டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா அவர் உயிருடன் இருந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் டெல்லி ஷாகேத் பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் அதிமுக அலுவலகம் மூன்றடுக்கில் கட்டப்பட்டுள்ளது. 25 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லி சென்றால் அதிமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்கிக்கொள்ளும் வகையில் அறைகளும் அந்த அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அதிமுகவின் டெல்லி அலுவலகத்தை நேற்று பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி, இஞ்ச் பை இஞ்சாக ஒவ்வொரு போர்ஷனாக பார்வையிட்டு வேண்டிய திருத்தங்களை கூறினார். இந்தக் கட்டிடத்தை முழுமையாக பொறுப்பேற்று கட்டுமானப் பணிகளை கண்காணித்து கட்டி முடித்தவர் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினமும் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமிக்கு சுற்றிக்காட்டி விளக்கிக் கூறியவர் தளவாய் சுந்தரம் தான். இதனை முன்கூட்டியே திறக்க திட்டமிடப்பட்ட நிலையில், ஓபிஎஸ் -இபிஎஸ் அதிகார மோதலால் அது கிடப்பில் போடப்பட்டது.












Click it and Unblock the Notifications