"குழம்பிய விமான கண்ட்ரோல்.." ஏர் இந்தியாவில் கடைசி நொடியில் நடந்தது என்ன! புதிய தகவல்
டெல்லி: கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா விபத்தில் 260 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நமது நாட்டில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய வல்லுநர் குழுவின் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே விபத்து நடந்த நாளிலேயே கூட விமானத்தில் ஒரு குறிப்பிட்ட குறைபாடு ஏற்பட்டதாகவும் அது குறித்து இப்போது விசாரித்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. அதன் முதற்கட்ட ரிப்போர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த நிலையில், அடுத்தகட்ட ஆய்வுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. விபத்திற்குத் துல்லியமாக என்ன காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சியில் வல்லுநர் குழு இறங்கியுள்ளது.

ஏர் இந்தியா விபத்து
இப்போது விமானத்தின் மின் மற்றும் சாப்ட்வேர் பாகங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை ஆராய்ந்து வருகின்றனர். இதில் ஏற்பட்ட சிக்கல்கள் சில தேவையில்லாத நடவடிக்கைகளைத் தூண்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் புறப்பட்ட சில நொடிகளில் ஆஃப் நிலைக்குப் போய் இருக்கிறது. விமானி செய்யாமல் தானாக இந்த எரிபொருள் சுவிட்ச் un-commanded transition முறையில் ஆஃப் நிலைக்குப் போய் இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்" என்றார்.
குறைபாடு
கடந்த ஜூன் 12ம் தேதி விமானம் புறப்பட்ட சில நொடிகளில் அது விபத்துக்குள்ளானது. அதில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்திய ஏவியேஷன் துறையில் இது மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "உண்மையில் விபத்து நடந்த அதே ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தலிருந்து லண்டனுக்கு புறப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அதே விமானம் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்துள்ளது. அப்போது விமானி 'ஸ்டெபிலைசர் பொசிஷன் டிரான்ஸ்யூசர் பெயிலியர்' இருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்" என்றார்.
என்ன சிக்கல்
ஸ்டெபிலைசர் பொசிஷன் டிரான்ஸ்யூசர் என்பது விமானத்தின் பிட்சைக் கட்டுப்படுத்தும் ஒரு சென்சார் ஆகும். இது தான் விமானம் மேலே செல்ல வேண்டுமா இல்லை கீழே செல்ல வேண்டுமா என்பதைக் கட்டுப்படுத்துகிறது.. மேலும் விமானியின் டேட்டாவுக்கு ஏற்ப விமானம் துல்லியமாக இயங்குவதை உறுதி செய்வதற்காக, விமானக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு டேட்டாவையும் இது அனுப்புகிறது. விமானத்தில் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்ட போதிலும், அதை அந்தப் பொறியாளர் சரிசெய்தார் என்று அதிகாரி கூறினார்.
குழப்பத்தை ஏற்படுத்தலாம்!
அவர் மேலும் கூறுகையில், "இந்தச் செயலிழப்பு ஒரு முக்கியமான பிரச்சனை.. ஏனெனில் இது விமானக் கட்டுப்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதனால் விமானத்தின் எரிபொருள் கூட கட் ஆஃப் ஆகலாம்.. ஆனால், தற்போது வரை நடந்துள்ள விசாரணையில் ஸ்டெபிலைசர் பொசிஷன் டிரான்ஸ்யூசர் செயலிழப்பு இந்த விபத்துக்குக் காரணமல்ல என்பது போலவே தெரிகிறது. ஆனால், இது வேறு பல சென்சார் செயலிழப்புக்கு வழிவகுத்ததா என்பதுதான் கேள்வி. அது குறித்து விசாரிக்கிறோம்" என்றார்.
இரட்டை இஞ்சின் செயலிழப்பு காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பொதுவாக விமானத்தில் எஞ்சின் பெயிலியர் ஆகும்போது, அதுவே தானாக ஸ்டார்ட் ஆகும். ஆனால், ஏர் இந்தியா விமானம் போதிய உயரத்தை அடைவதற்கு முன்பே இரட்டை இஞ்சின் செயலிழப்பு ஏற்பட்டதால் விமானிகள் அதை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயன்ற போதிலும் முடியாமல் போனது. இரட்டை இஞ்சின் செயலிழப்புக்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் தான் இப்போது அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications