"அய்யோ அய்யோ.." திடீரென டோனை மாற்றிய நிர்மலா சீதாராமன்.. அடுத்து மீண்டும் அட்டாக்.. என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசும் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் குறுக்கிட்ட நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் தந்த ரியாக்ஷன் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்தியப் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை மீதான விவாதத்திற்கு மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Aiyyo, Aiyyo Nirmala Sitharaman reaction when opposition blocked her speech in Parliament

மத்திய அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் எந்தவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், ஆதாரங்களின் அடிப்படையில் தான் அந்த அறிக்கை அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்: காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரத்தைத் தவறாக நிர்வகித்து பிரச்சனையின் மையமாக இருந்தவர் சோனியா காந்தி எனச் சாடிய நிர்மலா சீதாராமன், அவர் ஒரு சூப்பர் பிரதமர் போலச் செயல்பட்டார் என்றும் கடுமையாக விமர்சித்தார். தேசியப் பாதுகாப்பில் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டதாகச் சாடிய அவர், திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கவும் காங்கிரஸ் அரசு தாமதப்படுத்தியது என்றும் தலைமை தோல்வி அடைந்துவிட்டதையே இது காட்டுவதாகவும் விமர்சித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் அரசின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்கள் தான் 10 ஆண்டுக்கால அரசின் மையமாக இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது தலைமை இல்லாத அரசு தான் முக்கிய பிரச்சினை.. தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் என்ற பதவியில் இருந்து கொண்டு சோனியா காந்தி சூப்பர் பிஎம் போலச் செயல்பட்டார். இந்த தேசிய ஆலோசனை கவுன்சில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறான அதிகாரங்களைக் கொண்டிருந்தது. இப்படி இருக்கும் குழுவிடம் முக்கிய கோப்புகள் சென்றது ஏன்,

"நேரு இந்தியர்களை சோம்பேறிகள் என்றார்!" அப்படியே இந்திரா காந்தி பக்கம் திரும்பி.. பிரதமர் மோடி தாக்கு

அவமதிப்பு: மன்மோகன் சிங் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, ​​காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் அவசரச் சட்டத்தைக் கிழித்தெறிந்தார். அது நாட்டின் பிரதமரை அவமதிப்பது போல இல்லையா? ராகுல் காந்தியே தங்கள் பிரதமரைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

மேலும், பாதுகாப்புத் துறையிலும் குளறுபடிகள் நடந்தன. ரூ. 3,600 கோடி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் அதற்கான எடுத்துக்காட்டு. 2014ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த போது வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களில் கூட பற்றாக்குறை இருந்தது. நமது ராணுவ வீரர்களுக்குக் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் கூட அப்போது இல்லை" என்று சாடினார்.

அய்யோ அய்யோ: நிர்மலா சீதாராமன் பேசும் போது இடையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். நிர்மலா சீதாராமன் பேச்சைக் குறுக்கிடும் வகையில் அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களுக்குப் பதிலைக் கொடுத்தவாறே நிதியமைச்சர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

அங்கே பேசிய நிர்மலா சீதாராமன், "அப்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களால் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நன்மை இல்லை.. யாருக்கு நன்மை கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்" என்று அவர் கூறும் போதே மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் குறுக்கிடும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். இதனால் கடுப்பான நிர்மலா சீதாராமன், "அய்யோ... அய்யோ.. அய்யோ" என்று அலுத்துக் கொள்ளும் வகையில் குறிப்பிட்டார்.

இருப்பினும், அதன் பிறகும் தொடர்ந்து காங்கிரஸ் அரசை விமர்சித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், "சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது நீங்கள் அதை எப்படிச் சமாளித்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.. அப்படியிருக்கும் போது பொருளாதாரம் குறித்து எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்" என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+