Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ரேஸில்' திக்விஜய்சிங்கை வீழ்த்திய அஜய் மக்கான்- அகில இந்திய காங். பொருளாளர்- கார்கே அதிரடி நியமனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான தலைவர் பதவி தேர்தலே சுவாரசியமாக நடந்தது. அந்த தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்தான் தலைவராவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் கலகக் குரல் வெடித்ததால் அசோக் கெலாட் ரேஸுக்கே வரவில்லை. இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவரானார்.

Ajay Maken appointed as new Congress treasurer

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே ஒவ்வொரு கட்டமாக காங்கிரஸ் கட்சியின் மேலிட நிர்வாகிகளை நியமித்து வருகிறது. காங்கிர காரிய கமிட்டி உறுப்பினர்கள் நியமனத்தின் போதே சில அதிரடிகளையும் கார்கே வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பவன்குமார் பன்சால் பெயரே காரிய கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலில் இல்லை. இதனால் காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய பொருளாளர் நியமிக்கப்படுவதும் உறுதியானது.

ரேஸில் திக்விஜய் சிங்: இதனால் காங்கிரஸ் கமிட்டியின் புதிய பொருளாளர் யாராக இருக்கும் என்கிற விவாதங்கள் நடந்தன. இந்த பட்டியலில் மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்டவர் ரொம்பவே சீனியரான திக் விஜய்சிங்தான். காங்கிரஸ் கட்சியில் பஞ்சாயத்து அமைப்பு முறையில் இருந்து பார்லிமெண்ட் வரைக்கும் பணியாற்றிய மிகவும் அனுபவம் வாய்ந்த தலைவர். ஆகையால் திக்விஜய்சிங் பெயர் பலமாகவே அடிபட்டது.

அஜய் மக்கான் பொருளாளர்: ஆனால் தற்போது, மற்றொரு மூத்த தலைவரான அஜய் மக்கான், காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அஜய் மக்கான் கருத்து தெரிவிக்கையில், மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அஜய் மக்கான் யார்?: லோக்சபா தேர்தல் 2 முறை வென்று எம்பியாகவும் டெல்லி சட்டசபை தேர்தலில் 3 முறை வென்று எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், காரிய கமிட்டி உறுப்பினர் பதவிகளில் இருந்தவர். மன்மோகன்சிங் அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக 2012-ல் பதவி வகித்தார். டெல்லி சட்டசபை சபாநாயகராவும் இருந்தார். நாட்டில் 39 வயதில் சட்டசபை சபாநாயகர் பதவி ஏற்ற சரித்திரத்துக்கு சொந்தக்காரர் அஜய் மக்கான். அஜய் மக்கானின் உறவினர் முன்னாள் எம்பி லலித் மக்கான். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மாவின் மருமகன். 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலையில் தொடர்புடையவர் எனக் கூறி 1985-ல் லலித் மக்கான் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். லலித் மக்கான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீக்கிய பயங்கரவாதிகள் இருவரும் ராணுவ தளபதியாக இருந்த அருண் ஶ்ரீதவர் வைத்யா படுகொலை வழக்கில் தூக்கிலிடப்பட்டனர் என்பது வரலாறு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+