மியான்மர், பாகிஸ்தானை கதறவிட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் ஹீரோ-தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்
டெல்லி: நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக 3-வது முறையாக அஜித் தோவல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
18-வது லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களும் தற்போது பொறுப்புகளை ஏற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக 3-வது முறையாக அஜித் தோவல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
யார் இந்த அஜித் தோவல்?: 1968-ம் ஆண்டு கேரளா கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல். நாட்டின் முதன்மை உளவு மற்றும் வெளிநாட்டு கொள்கை வியூகம் வகுக்கும் அமைப்புகளான ஐபி, ரா ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றினார் அஜித் தோவல். "ரா" உளவாளியாக 7 ஆண்டுகள் பாகிஸ்தானில் அட்டகாசமாக பணியாற்றி அதன் ராணுவ செயல்பாடுகளை அங்குலம் அங்குலமாக உளவு பார்த்தவர் அஜித் தோவல்.
1980களில் தலைதூக்கிய மிசோரம் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை அடியோடு அழித்தொழித்ததில் அஜித் தோவல் பெரும் பங்கு வகித்தவர். பஞ்சாப் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரகசிய ஆபரேஷன்களை வெற்றிகரமாக நடத்தியவர்.
1970, 1980, 1990களில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட 10-க்கும் மேற்பட்ட விமான கடத்தல் சம்பவங்களை லாவகமாக கையாண்டவர். குறிப்பாக 1999 கந்தகார் விமானக் கடத்தலில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய அரசு குழுவுக்கு தலைமை வகித்தவர் அஜித் தோவல்.
பின்னர் இந்திய உளவுத் துறையான ஐபியின் இயக்குநரானார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி, பிரதமரான போது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித் தோவல். ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இந்திய செவிலியர்கள் சிக்கிக் கொண்ட போது அவர்களை பாதுகாப்பாக மீட்டவர் அஜித் தோவல்.
சர்ஜிகல் ஸ்டிரைக் நாயகன்: 2015-ல் மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்திய நாகா தீவிரவாதிகளை அழிப்பதற்காக மியான்மர் நாட்டு எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்களை அழித்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியவர். நேபாள பிரதமர் பதவியில் இருந்து இந்தியாவுக்கு எதிராக கேபி ஒலியை கவிழ்த்ததிலும் அஜித் தோவல் முக்கிய பங்கு வகித்தார் என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு.
2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து நடத்தபட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கின் நாயகனும் அஜித் தோவல்தான்.
சர்ச்சைகள்: அஜித் தோவல் மகன் சவுரியா தோவல் நடத்தும் இந்தியா பவுண்டேஷன் தொடர்பாக கடுமையான புகார்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்த விவகாரத்திலும் அஜித் தோவல் தலை உருண்டது. இத்தனைகளைக் கடந்தும் தற்போது 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியைத் தொடருகிறார் அஜித் தோவல்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications