"போனில் தப்பா எதாவது பார்த்தா.." ஆப்பிள் அலர்ட் வரும்! ராகுல் குறித்து பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
டெல்லி: பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அலர்ட் வந்த நிலையில், இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் தங்கள் ஐபோனுக்கு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து அலர்ட் மெசேஜ் வந்ததாக பகீர் புகாரை இன்று தெரிவித்தனர். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டையும் அவர்கள் பகிர்ந்திருந்தனர்.

அதில் அரசு ஆதரவுடன் ஹேக்கர்கள் உங்கள் அலைப்பேசியைக் குறிவைப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அலர்ட் வந்துள்ளதாகக் கூறி, அது தொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்டையும் பகிர்ந்துள்ளனர்.
அலர்ட்: அந்த அலர்ட் மெசேஜ்ஜில், "அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் நீங்கள் குறிவைக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. உங்கள் ஆப்பிள் ஐடி மூலம் இயங்கும் ஐபோனை வேறு பகுதியில் இருந்து இயக்க முயல்கிறார்கள். உங்களை அவர்கள் குறி வைக்கிறார்கள்.
அரசு உதவியுடன் இயங்கும் இந்த ஹேக்கர்கள் உங்கள் ஐபோனை ஹேக் செய்துவிட்டால், அதன் பின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவர்களால் உங்கள் ஐபோனையும், அதில் உள்ள தகவல்களையும் பயன்படுத்த முடியும். இது தவறான அலர்ட்டாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் கவனமாக இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் கூறிக் கொள்கிறது" என்று கூறப்பட்டிருந்தது.
ராகுல் காந்தி: சசி தரூர், ராகவ் சதா, பிரியங்கா சதுர்வேதி, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இதுபோல மெசேஜ் சென்றுள்ளது. இதையெல்லாம் செய்து மோடி அரசு உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிப்பதாகக் ராகுல் காந்தி தெரிவித்தார் மேலும் அவர், "நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் போராளிகள். எப்போதும் பின்வாங்க மாட்டோம். இதைலெலாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை... உங்களுக்கு எனது போன் வேண்டுமென்றால்... நானே தருகிறேன்" என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியைக் குறிவைத்த அவர், தப்பா எதாவது பார்த்துக் கொண்டிருப்பார்களுக்குத் தான் வைரஸ் அட்டாக் காரணமாக இதுபோன்ற மெசேஜ் வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சை கருத்து: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாங்களும் சைபர் வல்லுநர்களிடம் பேசினோம். இந்தியா மீது பகை கொண்ட சில நாடுகள், இப்படி உளவு பார்ப்பதில் தலைசிறந்து விளக்குபவர்கள்தான் இதைச் செய்துள்ளனர். ஒரு நபர் தப்பான விஷயங்கள் இருக்கும் இணையத்திற்குச் செல்லும் போதுதான் மொபைல்களில் மால்வேர், ஃபிஷிங் மற்றும் ஸ்பைவேர் என்பதை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

ஆப்பிள் நிறுவனமே இந்த மெசேஜ் தவறாக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் காந்தி உள்ளிட்ட மற்ற தலைவர்கள் ஏன் இதைச் சட்ட ரீதிாக அணுக மறுக்கிறார்கள். இது குறித்து அவர்கள் போலீசாரிடமும் புகார் தருவதில்லை.. ஆப்பிள் நிறுவனத்திற்கும் இது குறித்து புகார் தரவில்லை. ஆனால் இதை வைத்து அரசியல் செய்வதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.
சர்ச்சை: ராகுல் காந்தி, உங்கள் மொபைல் போனை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். தேசவிரோத சக்திகளுடன் கூட்டு வைக்காதீர்கள்.. எந்தவொரு இந்தியருக்கும் பொருத்தமில்லாத இணையத்திற்கு எல்லாம் செல்ல வேண்டாம்" என்றார். அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications