டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாதி, மதத்தால் பிரிக்கும் அரசியல் கட்சிகள்! காங்கிரசையும் சேர்த்து தாக்கிய குலாம் நபி ஆசாத்

Google Oneindia Tamil News

டெல்லி: ‛‛காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் ஜாதி, மதம் அடிப்படையில் 24 X7 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் பிரிவை ஏற்படுத்துகின்றன'' என காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் கூறினார்.

‛தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற திரைப்படம் மார்ச் 11ல் வெளியானது. இந்த படம் இந்தியா முழுவதும் பெரும் விவாத பொருளாகி உள்ளது. இந்த படத்துக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உண்மையை மறைத்து படம் எடுக்கக்கூடாது என அவர்கள் தங்களது அதிருப்தியை வெளிக்காட்டினர்.

இதெல்லாம் ரொம்ப தப்பு! பாஜகவினருக்கு தேசபக்தி பாடமெடுத்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்? என்ன நடந்தது? இதெல்லாம் ரொம்ப தப்பு! பாஜகவினருக்கு தேசபக்தி பாடமெடுத்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்? என்ன நடந்தது?

குலாம் நபி ஆசாத்

குலாம் நபி ஆசாத்

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சியில் இன்று காங்கிரஸ் கட்சியின் ஜி23 தலைவரான குலாம்நபி ஆசாத் பேசினார். அப்போது அவர் காஷ்மீரி பண்டித்கள் வெளியேற்றத்துக்கான காரணம் குறித்தும் விவரித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

 பிரிவினை ஏற்படுத்தும் கட்சிகள்

பிரிவினை ஏற்படுத்தும் கட்சிகள்

அரசியல் கட்சிகள் மதம், ஜாதி உள்ளிட்ட பிற விஷயங்களில் 24x7 என்ற அடிப்படையில் பொதுமக்களிடம் பிரிவுகளை உருவாக்கலாம். இந்த விவகாரத்தில் எந்த கட்சியையும் நான் மன்னிப்பதாக இல்லை. இதில் காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் அடங்கும். ஆனால் மக்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஜாதி, மதம் பாராமல் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்

 அனைவரும் பாதிப்பு

அனைவரும் பாதிப்பு

மகாத்மா காந்தி இந்துவாக இருந்தாலும் அவர் மதசார்ப்பற்றவர் என்பதை நான் நம்புகிறேன். ஜம்மு காஷ்மீரில் நடந்த சம்பவங்களுக்கு பாகிஸ்தானும், பயங்கரவாதமும் தான் காரணம். இது இந்துக்கள், காஷ்மீரி பண்டித்கள், காஷ்மீரி முஸ்லிம்கள், டோக்ராக்கள் என அனைவரையும் பாதித்துள்ளது என்றார்.

 வரி விலக்கு

வரி விலக்கு

‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் 1990ல் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டித்கள் வெளியேறியதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதையும் காங்கிரஸ் விமர்சித்தது. அதாவது திரைப்படம் மூலம் சமூகத்தில் வெறுப்பை பரப்ப பாஜக முயல்வதாக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் விவாதம் எழுந்தது.

பிரதமர் பாராட்டு

பிரதமர் பாராட்டு

இதற்கிடையே ‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட குழுவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், உண்மையை வெளிப்படுத்தும் திரைப்படம் என அவர் கூறினார். இதுகுறித்து பிரதமர் நரேந்தரி மோடி கூறுகையில், ‛பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மையை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் காட்டியுள்ளது. இதுபோன்ற படங்கள் மூலம் மக்கள் உண்மையை அறிந்து கொள்வதோடு, கடந்த கால சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதையும் புரிந்து கொள்வார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
All political parties, including mine, create division among people, says Ghulam nabi azad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X