மோடி 3.0 அமைச்சரவை.. எல். முருகனுக்கு இந்த முறையும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 72 எம்பிக்கள் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தற்போது இவர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து நிலையில், நேற்று மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

L Murugan BJP NDA

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்றார். இந்நிலையில் தற்போது அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல இந்த முறையும் பாஜக முக்கிய துறைகளை தன் வசமே வைத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக உள்துறை, பாதுகாப்பு, நிதி, சாலை போக்குவரத்து மற்றும் வெளியுறவு என முக்கிய 5 துறைகள் முறையே அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அவருக்கான இலாக்காவாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த எல்.முருகன், மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்தியிருந்தார். குறிப்பாக அவர் மேற்கொண்டிருந்த வேல் யாத்திரை பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் இருந்த மக்களுக்கும், பாஜக ஆக்டிவாக இருக்கிறது என்பதை இந்த யாத்திரை காட்டியது.

இதனையடுத்து மோடி 2.O ஆட்சியில் இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. இவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல மத்திய அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்பட்டது. தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார்.

பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இவரது ராஜ்யசபா பதவிக்காலம் முடிந்த நிலையில், மீண்டும் மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தவிர கடந்த லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார்.

1977ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்தவர் எல்.முருகன். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த எல்.முருகன், அதன்பின் சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டத்தை பெற்றார். அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். அதேபோல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் எல்.முருகன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

அதுமட்டுமல்லாமல் பாஜகவின் தேசிய பட்டியலினத்தோர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வந்தார். தொடர்ந்து 2011 சட்டசபை தேர்தலில் சொந்த மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தனபால் வெற்றிபெற்ற நிலையில், எல்.முருகன் வெறும் 1,730 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

மோடி 3.O அமைச்சரவையில் லோக்சபா தேர்தலில் தோல்வியுற்ற ஒருவர் அமைச்சராக இடம் பிடித்திருக்கிறார் எனில், அது எல்.முருகன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+