அம்பானி, அதானி அரசாங்கம் நடக்கிறது.. இன்று பட்டதாரிகள் பக்கோடா விற்கிறார்கள் - ராகுல் காந்தி ஆவேசம்
டெல்லி: இது மோடி அரசாங்கம் இல்லை, அம்பானி மற்றும் அதானி அரசாங்கம் என்றும், இன்று நாட்டில் பட்டதாரிகள் பக்கோடா விற்கிறார்கள் என்றும், உண்மை பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்து-முஸ்லீம் விவகாரம் எழுப்பப்படுகிறது என்று டெல்லியில் ராகுல் காந்தி எம்.பி பேசியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்கினார்.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை அவரது யாத்திரை நடைபெறுகிறது. சுமார் 3 மாதத்திற்கும் மேலாக ராகுல் காந்தியின் யாத்திரை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு
அதாவது இன்றோடு அவரது யாத்திரை 108- வது நாளை எட்டியுள்ளது. ராகுல் காந்தியின் யாத்திரை இன்று டெல்லிக்குள் நுழைந்தது. 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3 ஆயிரம் கி.மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு ராகுல் காந்தி டெல்லி வருகை தந்துள்ளார். அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி செங்கோட்டை பகுதியை வந்த பிறகு இன்றைய யாத்திரை நிறைவு பெற்றது.

வெறுப்பை அகற்ற நினைத்தேன்
செங்கோட்டை பகுதியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி பேசியதாவது:- பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் இந்தியாவை ஒற்றுமைப்படுத்துவதே ஆகும். இந்த யாத்திரையை தொடங்கிய போது நாட்டில் நிலவும் வெறுப்பை அகற்ற நினைத்தேன். அனைத்து இடங்களிலும் வெறுப்பை உருவாக்கி வைத்துள்ளனர். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிறைந்தது தான் இந்தியா.

அம்பானி மற்றும் அதானி அரசாங்கம்
தற்போது இருப்பது நரேந்திர மோடியின் அரசாங்கம் கிடையாது. இது அம்பானி மற்றும் அதானி அரசாங்கம் ஆகும். உண்மை பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இந்து- முஸ்லிம் விவகாரம் எழுப்பப்படுகிறது. நாட்டில் இன்றைய பட்டதாரிகள் பக்கோடா விற்கின்றனர். பாரத் ஜோடோ யாத்திரையில் நாய்கள் கூட வந்தன. ஆனால், யாரும் அதை கொல்லவில்லை. பசு, எருமை மாடுகள், பன்றிகள் என அனைத்து விலங்குகளும் வந்தன. இந்த யாத்திரை நமது இந்தியா போன்றது. வெறுப்பும் கிடையாது, வன்முறையும் கிடையாது.

ஊடகங்கள் எங்கள் நண்பர்கள்தான்
நான் 2,800 கி.மீட்டர் தூரம் நடந்தேன். ஆனால், எந்த வெறுப்பையும் பார்க்கவில்லை. ஆனால், நான் தொலைக்காட்சியை ஆன் செய்ததும் வன்முறையை பார்க்கிறேன். ஊடகங்கள் எங்கள் நண்பர்கள்தான். ஆனால், அவர்கள் ஒருபோதும் எங்கள் பேச்சை ஒளிபரப்புவதில்லை. ஊடகங்கள் பின்புறமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. நான் கடந்த 2004 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த போது ஊடகங்கள் என்னை நாள் முழுவதும் புகழ்ந்து கொண்டிருந்தன.

ஒரு மாததத்திற்குள் காட்டியிருக்கிறேன்
பிறகு நான் உத்தரபிரதேசம் என்று விவசாயிகளின் பிரச்சினைகளை எழுப்பிய போது எனக்கு எதிராக திரும்பி விட்டன. எனது இமேஜை கெடுக்க ஆயிரக்கணக்கான கோடிகளை பிரதமர் மோடியும் பாஜகவும் செலவழித்துள்ளன. ஆனால் உண்மையை ஒரு மாததத்திற்குள் நாட்டிற்கு காட்டியிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
-
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications