கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் எனக்கும்.. திமுக எம்பிக்களை அதிர வைத்த அமித்ஷா
டெல்லி: "கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் எனக்கும் வலிக்கிறது.. இலங்கை அகதிகள் விஷயத்தில் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்?" என்று தி.மு.க.வுக்கு சரமாரியான கேள்விகளை அமித்ஷா எழுப்பினார். மேலும் தமிழ் அகதிகளுக்காக நீங்கள் வகுத்த கொள்கையில் நாங்கள் ஒரு 'கமா'வைக் கூட மாற்றவில்லை. தி.மு.க. அங்கம் வகித்த அரசாங்கத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட அதே கொள்கையை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டோம் என்றும் அமித் ஷா கூறினார்.
கனிமொழி எம்பி கேள்வி
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதா தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்பி கனிமொழி பேசுகையில், குடிப்பெயர்வு மற்றும் வெளிநாட்டினர் மசோதாவில் சிறப்பு பரிந்துரைகளை இணைக்க வேண்டும்.

இலங்கை தமிழர் குடியுரிமை
அந்த வகையில், இலங்கை தமிழ் அகதிகளை நீண்ட கால அகதிகளாக சட்டத்தில் தனித்துவமான வகையாக அங்கீகரிக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழ்ந்தவர்கள் அல்லது இங்கு பிறந்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு விரைவான குடியுரிமைக்கு சட்டப்பூர்வ பாதையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்" என்றார்.
கனிமொழிக்கு அமித்ஷா பதில்
கனிமொழியின் இந்த பேச்சுக்கு உடனடியாக பதில் அளித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், "நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இத்தனை தமிழ் அகதிகள் வந்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் கொள்கை என்ன? என்றும் கேட்டார். அவர் மிகவும் நன்றாகத்தான் பேசினார்.
இதயம் வலிக்கிறது
இலங்கை அகதிகள் விஷயத்தில் கனிமொழிக்கு இதயம் எப்படி வலிக்கிறதோ, அதே மாதிரிதான் எனது இதயமும் வலிக்கிறது. அகதிகளுக்கான எங்கள் கொள்கை என்ன? என்று கனிமொழி கேட்டார். நான் அதை பற்றி விளக்கம் அளிக்கிறேன்..
10 ஆண்டு என்ன செய்தீர்கள்
இலங்கை அகதிகளுக்கான 1986-ம் ஆண்டின் இந்திய அரசாங்கத்தின் கொள்கை அப்படியேத்தான் இப்போதும் உள்ளது. நீங்கள் (திமுக) 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் இருந்தபோதும் கொள்கை அப்படியே இருந்திருக்கிறது.. 10 ஆண்டுகளாக தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தார், டி.ஆர்.பாலுவும் ஒரு அமைச்சராக இருந்தார். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. இப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களா? அப்போது நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களிடம் கேட்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
திமுக அங்கம் வகித்த அரசு
தமிழ் அகதிகளுக்கான நீங்கள் வகுத்த கொள்கையில் நாங்கள் ஒரு 'கமா'வைக் கூட மாற்றவில்லை. தி.மு.க. அங்கம் வகித்த அரசாங்கத்தில் இருந்தபோது பின்பற்றப்பட்ட அதே கொள்கையை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.. நீங்கள் ஏதேனும் மாற்றங்களை விரும்பினால், அவற்றை என்னிடம் கொடுங்கள். அதை நாங்கள் பரிசீலிப்போம்.
கலாநிதி வீராசாமி குறுக்கீடு
அப்போது வடசென்னை தொகுதி எம்பியான கலாநிதி வீராசாமி குறுக்கிட்டு, நீங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று அமித்ஷாவை பார்த்து கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த அமித்ஷா, இதுவரை, தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 4 முறை என்னை சந்தித்துள்ளனர். ஆனால் ஒரு முறை கூட அவர்கள் தமிழ் அகதிகளைப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.
பரிசீலிப்போம் என அமித்ஷா விளக்கம்
ஆனால் இப்போது ''ஏதாவது செய்யுங்கள், ஏதாவது செய்யுங்கள்'' என்று கூறுகிறார்கள். நீங்கள் தமிழ் அகதிகள் தொடர்பான பிரச்சினையை ஒருபோதும் எழுப்பவில்லை. உங்கள் கொள்கை நல்லதாகத்தான் இருக்கும் என்று கருதி, நாங்கள் அதை பின்பற்றி வருகிறோம். இப்போதும் கூட, நீங்கள் ஏதாவது பரிந்துரைத்தால், நாங்கள் அதைப் பரிசீலிப்போம்" இவ்வாறு அமித்ஷா பதில் அளித்தார்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உதயநிதிக்கு பாதிப்பு என்பதால் கனிமொழிக்கு சீட் இல்லையா? துரைமுருகன் பதில் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications