டெல்லி மசோதா.. ஆம் ஆத்மியை காங்கிரஸ் ஏன் ஆதரிக்கிறது தெரியுமா..! அமித் ஷா பரபர பேச்சு
டெல்லி: டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்கு ராஜ்யசபாவில் நடந்த நிலையில், அதில் பேசிய அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அவை முடங்கி வந்தது.. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துவதால் அவை முடங்கி வந்தது.

இதற்கிடையே அமளிக்கு நடுவே மத்திய அரசு சில மசோதாக்களையும் மத்திய அரசு கொண்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதாவை கொண்டு வந்ததது.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி அரசு இருக்கிறது. அங்கே ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகத் தீர்ப்பை வழங்கியது. இதற்கிடையே இதில் ஆம் ஆத்மி அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்சபாவில் இந்த மசோதா தாக்கலானது.
இதற்கிடையே இன்று இது தொடர்பான விவாதம் இன்று ராஜ்யசபாவில் நடைபெற்றது. அப்போது பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு உடனடியாக டெல்லியில் ஆம் ஆத்மி அரசு விஜிலென்ஸ் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்தது. அவர்கள் தான் முதல்வரின் வீடு புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்து வந்தனர். இதன் காரணமாகவே விஜிலென்ஸ் துறை அதிகாரிகளை ஆம் ஆத்மி அரசு உடனடியாக இடமாற்றம் செய்தது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஆம் ஆத்மியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. தலைநகர் டெல்லியில் சேவைகள் உட்பட அனைத்து விஷயங்களிலும் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்தியதே காங்கிரஸ் அரசு தான்.. இப்போது அவர்கள்
ஆம் ஆத்மி கட்சியைத் திருப்திப்படுத்த டெல்லி சேவை மசோதாவை எதிர்க்கிறார்கள்.
இந்த மசோதா எந்தவொரு எமெர்ஜென்சியையும் விதிக்காது.. இது டெல்லி மக்களின் உரிமைகளையும் பறிக்காது. இந்த மசோதாவின் நோக்கம் அது இல்லை. சிலர் டெல்லியில் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவே மத்திய அரசு இதைக் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர். இந்திய மக்கள் எங்களுக்கு அதிகாரத்தையும் உரிமையையும் வழங்கியுள்ளனர். எனவே, மத்திய அரசு எந்த மாநிலத்திடமிருந்தும் அதிகாரத்தைப் பிடுங்கத் தேவையில்லை. நாங்கள் 130 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும் அவர் கூறினார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications