ஹய்யா நான் ஒளிஞ்சிக்கிட்டேனே.. யாராலும் கண்டுபிடிக்க முடியாதே.. வேடிக்கை காட்டிய யானை.. வைரல் போட்டோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு மரத்தின் பின்னால் யானை ஒன்று ஒளிந்து கொள்ள முயற்சிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் யானையை ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கிண்டல் செய்கிறார்கள்.

வனத்துறை அதிகாரி பர்வீன் காஸ்வான் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு கேள்வியும் கேட்டுள்ளார். முதலில் அந்த புகைப்படத்தை பார்த்தவர்களுக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு போய்விட்டன.

An Elephant attempts to hide behind tree image goes viral

ஆம் ஒரு யானை மரத்தின் பின்னால் நின்று கொண்டிருக்கும் காட்சியைத்தான் அவர் புகைப்படமாக வெளியிட்டிருந்தார். மேலும் இந்த யானை மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு என்ன நினைத்திருக்கும் என யாராவது கூறுங்களேன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் சிரிக்கிறார்கள். மேலும் கமல் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கூறுவார். அதுபோல் இந்த யானையைப் பார்க்கும் நெட்டிசன்கள் அதே டயலாக்கை கூறுகிறார்கள்.

மேலும் சிலர் சுவர்களே கட்டாத வீட்டிற்கு இருக்கும் கதவுக்கு உள்புறமாக தாழிட்டுக் கொண்டால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கிறது இந்த யானையின் செயல் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+