முரட்டு குடிகாரரா இருப்பார் போலயே.. 200 லிட்டர் பீரை ஏக் தம்மில் குடித்து மட்டையான யானை.. வீடியோ
டெல்லி: கிராமத்தில் புகுந்த யானை கரும்பு, தேங்காய், வாழைப்பழத்தை சாப்பிடும் என பார்த்தால் 200 லிட்டர் பீரை ஒரே மொடக்காக குடித்துவிட்டு எழுந்திருக்க முடியாமல் படுத்துக் கிடந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கோயில் யானை என்றாலே தெய்வீக மணம் கமழும். அப்பிராணியாகவே இருக்கும். குழந்தை போல் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பழகும். அதிகம் பாசம் கொண்டது. எனவே இந்த யானைகளை பார்த்துவிட்டு யாரும் ஓடமாட்டார்கள். மாறாக அதனுடன் பழகப் பார்ப்பார்கள்.

அதிலும் அவை செய்யும் சுட்டித்தனங்களையும் சேட்டைகளும் பார்த்தால் கவலையே மறந்துவிடும். கோடை காலத்தில் நீச்சல் குளங்களில் அந்த யானை அடிக்கும் லூட்டியை காண கண்கோடி வேண்டும். ஒரு பெரிய டபராவில் குட்டி யானைகள் டைவ் அடிப்பதை பார்க்கும் போது, டேய் பார்த்துடா தண்ணீயெல்லாம் வெளியே போய்ட போகுது என நினைக்க தோன்றுகிறது. இதே காட்டு யானை என்றால் ஒரு பயம் இருக்கும்.
அவை காட்டுப்பகுதியில் உணவு இல்லாத நிலையில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வரும். அங்குள்ள வயல்கள், நிலங்கள், வீடுகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடும். பிறகு காட்டுக்கே போகும். சில யானைகள், உணவு கிடைக்கும் இடத்திலேயே இருந்து விடலாம் என நினைத்து அந்த பகுதியிலேயே சுற்றி வரும், பிறகு அங்கிருந்து வேறு பகுதிக்கு செல்லும். இப்படி யானைகள் வாழைப்பழம், கரும்பு, தேங்காய் உள்ளிட்டவைகளை சாப்பிடும்.
ஆனால் பார்க்க ஆப்பிரிக்க நாடு போல் உள்ளது. அந்த இடத்தில் ஒரு யானை கீழே விழுந்து கிடக்கிறது. அதை தூக்கும் முயற்சியில் கிராமத்தினர் உள்ளனர். கடைசியில் அங்குதான் ஒரு ட்விஸ்ட் உள்ளது. ஒரு மலைவாழ் கிராமத்திற்கு ஒரு யானை வருகிறது. அந்த காட்டு யானையை பார்த்ததும் கிராம மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதையடுத்து அந்த பகுதியில் விற்பனைக்காக மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பீர் வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 200 லிட்டர் பீரையும் குடித்துவிட்டு அந்த யானை போதை தலைக்கேறியதும் அங்கேயே மட்டையாகிவிட்டது. இதுதான் சாக்கு என நினைத்து போதையில் படுத்துக் கிடந்த யானை மீது சிறுவர்கள் சறுக்கா மரம் ஏறி விளையாடினர். ஆயினும் அந்த யானை போதையிலேயே இருந்தது. ஒரு கட்டத்தில் யானை எழுந்திருக்க முயற்சித்தபோது அதனால் முடியாமல் கீழே விழுந்தது. இது குறித்து வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
வடிவேல் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினை கரெக்ட் செய்ய முதலில் அந்த வீட்டு யானைக்கு மதுவை ஊற்றிவிடுவார். அது மயக்கத்தில் இருக்கும் போது உள்ளே வந்து ஹீரோயினை கரெக்ட் செய்ய பந்தா காட்டி வருவார். அதற்குள் அந்த நாய்க்கு போதை தெளிந்துவிடும். அந்த நாய்க்கு ஊற்றி மீதமுள்ள சரக்கை பாக்கெட்டில் வைத்திருப்பார். அந்த நாய் உடனே அந்த பாட்டிலையே பார்த்து குரைக்கும். உடனே அந்த நாய்க்கு புட்டி பால் கொடுப்பது போல் வடிவேல் சரக்கை கொடுப்பார். அதுவும் முழுவதுமாக குடித்துவிட்டு ஜன்னி வந்தது போல் விரைப்பாகிவிடும். அதை எழுப்புவதற்கு வடிவேல் படாதபாடு படுவார்.

தற்போது இந்த யானையும் மட்டையாகியுள்ளதை பார்க்கும் போது வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. இது குடித்துவிட்டு விழுந்து கிடப்பதை பார்த்தால் மொடா குடிக்காரர்களே தோற்றார்கள் போங்க!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications