எக்ஸ் பேக்டர்.. யாருங்க இவரு? இந்திய அணியின் காம்பினேஷனையே புரட்டி போட்ட இளம் வீரர்.. கவனிச்சீங்களா?
டெல்லி: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முக்கியமான கேம் சேஞ்சராக இளம் வீரர் ஒருவர் உருவெடுத்து உள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது.
இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. முக்கியமாக இஷான் கிஷான். ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள்.
இந்த நிலையில்தான் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மேட்ச் தொடங்க உள்ளது.

இந்திய அணி
கடந்த போட்டியில் இந்திய அணியில் ருத்துராஜ் இடம்பெறவில்லை. இதற்கு பதிலாக அணிக்குள் வாஷிங்க்டன் சுந்தர் இடம்பெற்று இருந்தார்,. அதேபோல் சாஹர் அணியில் இடம்பெறவில்லை. மூன்று ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி களமிறங்கி இருந்தது. இன்றும் அதே அணியுடன்தான் இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமானது ஆகும்.

முக்கியம் ஏன்?
இன்றைய போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில், அந்த அணியின் ஒருநாள் புள்ளிகள் வெகுவாக குறையும். அப்படி நடந்தால் தென்னாப்பிரிக்க 2023ல் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தேர்வு ஆகாது. மாறாக அந்த அணி தகுதி சுற்றில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன் காரணமாக இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்திய அணி
இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் ஷிகர் தவான், சுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுவார்கள். இது கடந்த போட்டியில் இந்திய அணியில் ஆடிய அதே வீரர்கள் லிஸ்ட். கடந்த போட்டியில் ஆவேஷ் கான் தவிர மற்ற வீரர்கள் பெரும்பாலும் நன்றாக ஆடினார்கள். அதனால் இதே அணிதான் இன்றும் ஆடும்.

முக்கியம்
இந்திய அணியில் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டது சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. பவுலிங்கில் இவர் சிறப்பாக செயல்படுகிறார். ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் இவர் சிறப்பாக பேட்டிங்கும் செய்து இருக்கிறார். எந்த இடத்திலும் பேட்டிங் ஆட கூடிய திறன் கொண்டவர் இவர். ஓப்பனிங் இறக்கிவிட்டாலும் ஆடுவார். கடைசி நேரத்தில் பினிஷிங் செய்ய சொன்னாலும் ஆடுவார்.

எக்ஸ் பேக்டர்
இவரின் வருகையால் இந்திய அணியின் காம்பினேஷனே மாறி உள்ளது. இந்திய அணியில் இவர் எக்ஸ் பேக்டர் வீரராக உருவெடுத்து உள்ளார். தற்போது ஜடேஜா காயம் காரணமாக அடிக்கடி ஆப்சென்ட் ஆகிறார். அவருக்கு மாற்றாக அணிக்குள் வரும் தீபக் ஹூடா போன்றவர்கள் சரியாக ஆடுவது இல்லை. இந்த நிலையில்தான் ஷாபாஸ் அகமது நம்பிக்கை கொடுக்கிறார். இவரை தொடர்ந்து பயன்படுத்தும் பட்சத்தில் அடுத்த வருடம் நடக்க உள்ள 50 ஓவர் 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் பிரச்சனை சரி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications