இந்தியாவின் பிரம்மாண்ட தனியார் உயிரியல் பூங்கா.. 200 யானை, 300 சிறுத்தை.. அசரடித்த ஆனந்த் அம்பானி
டெல்லி: 200 யானைகள், 300 சிறுத்தைகள் , 300 மான்கள் என மொத்தம் 2000 வன விலங்குகளுடன் அனந்த் அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்கா இந்தியாவின் மிக பிரம்மாண்டமான வன உயிரில் பூங்காக்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் உயிரில் பூங்காக்களில் ஒன்றாக உள்ள ஜாம் நகர் பூங்காவை பற்றி திகைக்க வைக்கும் தகவல்களை பார்ப்போம்.
இந்தியாவின் முதல் பெரிய தனியார் உயிரியல் பூங்கா என்று பொதுமக்களால் திகைப்புடன் அழைக்கப்படும் ஆனந்த் அம்பானியின் தனியார் உயிரியல் பூங்கா ஜாம்நகரில் 'வந்தாரா' என்ற வனத்தில் இருக்கிறது. இதுதான் இந்தியாவின் முதல் தனியார் உயிரியல் பூங்காவா என்றால் நிச்சயம் இல்லை.. ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா குழுமம் நடத்தும் மிருகக்காட்சிசாலை ஏற்கனவே இருக்கிறது. இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மான் பூங்காக்கள் இயங்கி வருகின்றன.

அதேநேரம் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான தனியார் உயிரில் பூங்காவாக ஆனந்த் அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்கா திகழ்கிறது. ஜாம்நகரில் 3,000 ஏக்கரில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் இருக்கிறது. இதில் ஏராளமான மரங்கள், விலங்குகள் வாழ்கின்றன. நம்ம வண்டலூர் உயிரியல் பூங்காவே 1,265 ஏக்கரில் தான் இருக்கிறது.இது இந்தியாவின் மிகப்பெரிய அரசு உயிரியல் பூங்காக்களில் ஒன்று.
இந்நிலையில் வண்டலூரை விட 2 மடங்கிற்கும் அதிகமான இடத்தில் வந்தாரா உயிரியல் பூங்கா இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி யானை உள்ளிட்ட வனவிலங்குள் மீது அதிக பாசம் கொண்டவர். அவருக்கு பல்வேறு வனவிலங்குகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசை பிறந்துள்ளது. மகனின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய முகேஷ் அம்பானி, தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக அமைத்தது தான் ஜாம் நகரில் உள்ள 'வந்தாரா' உயிரியல் பூங்கா.
சரி விஷயத்திற்கு வருவோம்.. 3000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 650 ஏக்கர் நிலத்தை அரிய வகை வனவிலங்குகள் இயற்கையாக வாழ்வதற்காக ஒதுக்கி உள்ளார்கள்.. இந்த உயிரியல் பூங்காவில் பெரும்பாலான இடங்கள் யானைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 200 யானைகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இந்த பூங்காவில் ஆனந்த் அம்பானி மொத்தம் 300 சிறுத்தைகளை வைத்து பராமரிக்கிறார். இதேபோல் ஏராளமான புலிகள், சிங்கங்கள் மற்றும் ஜாகுவார்கள் ஆனந்த் அம்பானியின் பூங்காவில் வாழ்கின்றன. மேலும் முதலைகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் உட்பட 1,200 ஊர்வன விலங்குகளும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த 300 மான்கள் என மொத்தம் 2000 உயிரினங்கள் வந்தார பூங்காவில் வாழ்கின்றன..
யானைகளை எப்படி பாதுகாக்கிறார்கள்.. ராதாகிருஷ்ணா விலங்குகள் நல அறக்கட்டளை அமைப்பின் மூலம் யானைகள் பராமரிக்கப்படுகிறது. மற்ற விலங்குகளை கிரீன்ஸ் விலங்கியல் மையம் என்ற அமைப்பு பராமரிக்கிறது. யானைகள் மற்றும் விலங்குகளை பராமரிக்க 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வந்தாராவில் இருக்கிறார்கள். இது தவிர கால்நடை மருத்துவர்கள், உயிரியலாளர்கள், நோயியல் நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களும் இருக்கிறார்கள்.
இந்தியாவில் எந்த மிருகக்காட்சிசாலையையும் தொடங்க அல்லது நடத்த தனியாருக்கு அனுமதி உள்ளது.. அடிக்கடி வந்த விலங்குகள் நல ஆணைய அதிகாரிகள் வந்து சோதனை செய்வார்கள்.. இதன் மூலம் விலங்குகள் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வார்கள். ஒருவேளை சரியாக கவனிக்கவில்லை என்றால் உடனே அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துவிடும். 200 யானைகள், ஏராளமான சிறுத்தை,புலி உள்பட 2000க்கும் அதிகமான வன உயிரினங்களை பராமரிப்பது என்பது எளிதான வேலையல்ல,. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை அம்பானி செய்வதால் பலரும் இதை ஆச்சர்யத்துடன் பார்த்தாலும், விமர்சனங்களை வைக்காமல் இல்லை..
இந்த வந்தாரா ஜாம்நகர் பூங்கா உலகின் மிகப்பெரிய மிருகக்காட்சிசாலைகளில் ஒன்றாக உருவெடுக்கும் என்றும். இங்கு அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகளை மீட்டு பாதுகாத்து வருகிறார்கள். இது ஒரு மிருகக்காட்சிசாலை மட்டுமல்ல, விலங்குகளுக்கான விரிவான மறுவாழ்வு மையமாகவும் இருக்கிறது. ஆனந்த் அம்பானி தனது திருமணத்தையொட்டி இதை பொதுமக்களின் பார்வைக்காக திறந்துள்ளார். இப்போது வரை கட்டணம் அறிவிக்கப்படவில்லை. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிப்பார்கள் என தெரிகிறது. விரைவில் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications