முக்கிய ஆவணங்களுடன் டெல்லிக்கு திடீர் விசிட் அடித்த அன்புமணி.. அமித்ஷாவுடன் இன்று சந்திப்பா? பின்னணி
டெல்லி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க அன்புமணி ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, இன்று பகல் 12.30 மணியளவில் தேர்தல் ஆணையத்திற்கு செல்லும் அன்புமணி ராமதாஸ், கட்சி தலைவராக, தான் தேர்வு செயப்பட்டது தொடர்பான விவரங்களை அளிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே நிர்வாகிகளை நியமித்து வரும் நிலையில், தன்னுடன் இருப்பவர்களுக்கே சீட் வழங்கப்படும் என்றும் கூட்டணி பேச்சுவார்த்தையும் தன்னுடனே நடத்த வேண்டும் என்றும் ராமதாஸ் கூறி வருகிறார்.

பாமகவில் கட்சியின் நிறுவனர், தலைவர் நானே எனவும் கடைசி மூச்சு இருக்கும் வரை நானே தலைவராக நீடிப்பேன் எனவும் ராமதாஸ் கூறி வருகிறார். மறுபக்கம் மாவட்ட வாரியாக அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியினரை சந்தித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்க கூடிய சூழலில், தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்க கூடிய பாமகவில் ஏற்பட்டுள்ள இந்த சலசலப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜக தேசிய தலைவ ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க அன்புமணி ராமதாஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, இன்று பகல் 12.30 மணியளவில் தேர்தல் ஆணையத்திற்கு செல்லும் அன்புமணி ராமதாஸ், கட்சி தலைவராக, தான் தேர்வு செயப்பட்டது தொடர்பான விவரங்களை அளிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து, கட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அன்புமணி ராமதாஸ் நிரூபிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பாமகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ள நிலையில், இன்று அமித்ஷா மற்றும் ஜேபி நட்டாவை சந்திக்க அன்புமணி ராமதாஸ் நேரம் கோரியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயாக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என்று கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்டவை கூறி வருகிறது.
இத்தகைய சூழலுக்கு இடையே, அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவர்களை சநதிக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கூட்டணிக்கான அச்சாராமா? என்ற பேச்சையும் கிளப்பியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம் பெற்று இருந்தது. பாமகவில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் உள்கட்சி பூசல் உச்சத்தை தொட்டு இருப்பது அக்கட்சியினரை கவலை அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications